

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 8-ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி செல்வதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு மற்றும் போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து 5-ம்தேதி முதல் 7-ம்தேதி வரை வழக்கமாக இயக்கக்கூடிய 6573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 பேருந்துகள் (அதில் 1,659 தனியார் ஒப்பந்த பேருந்துகள் அடங்கும்) என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15,659 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோன்று தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் வருகிற, 9-ம்தேதி மற்றும் 10-ம்தேதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கக்கூடிய 4,382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்பு பேருந்துகள் (அதில் 1,241 தனியார் ஒப்பந்த பேருந்துகள் அடங்கும்) என 2 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 11,197 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை திருவான்மியூர், ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், சிறுசேரி, அடையாறு, பிராட்வே, எழும்பூர், அம்பத்தூர், தரமணி, தீவுத்திடல், கிண்டி, வேளச்சேரி, அசோக் பில்லர், பூந்தமல்லி மற்றும் சைதாப்பேட்டை என 16 இடங்களில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மக்கள் முன்பதிவு செய்து தங்கள் ஊர்களுக்கு நேரடியாக செல்லும் வகையில் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 4 பேருந்து நிலையங்களுக்கும் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இணைப்பு பேருந்துகள் 24 மணிநேரமும் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளைக் கண்டறிய கிளாம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் 12 சிறப்புப் பறக்கும் படைகள் (Squads) அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விதிகளை மீறும் பேருந்துகள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், குறைகள் மற்றும் புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் நலன் கருதி 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் :
தமிழ்நாடு அரசின் சார்பில் பயணிகளின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், வழித்தடங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கும் மற்றும் பயணிகளின் புகார்களைத் தெரிவிப்பதற்கும் இந்த கட்டுப்பாட்டு அறை உதவுகிறது.
பண்டிகைகள் மற்றும் சிறப்பு நாட்களில் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்வதை உறுதிசெய்ய இது 24x7 முழுமையாகச் செயல்படுகிறது.
மேலும் பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் இயக்கம், குறைகள் மற்றும் புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 9445014450, 9445014436 ஆகிய தொலைபேசி எண்களை (24X7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் 149 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர்களுக்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 18004256151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களையும் (Toll Free Number மற்றும் 9384808333 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கெள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் tc.tn@nic.in என்ற மின்னஞ்சலக முகவரியிலும் புகார் அளிக்கலாம்.
மேலும் பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (May / Help You) அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.