தீபாவளி சிறப்பு பேருந்துகள்: சென்னையில் எந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து? முழு விவரம் இதோ.!

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் நெரிசலின்றி பயணிக்க முழுமையான பேருந்து நிலைய வழிகாட்டிப் பட்டியல்.
தீபாவளி சிறப்பு பேருந்துகள்
Diwali Special Buses
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 5) முதல் நவம்பர் 7-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், கூட்ட நெரிசல் இன்றி செல்வதற்கு வழக்கமான பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தற்போது கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் என 3 முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக மறைமலை நகர் மற்றும் கிளாம்பாக்கத்தில் உள்ள CMDA காலநிலைப் பூங்காவிற்கு அருகில் உள்ள திறந்தவெளி இடத்தில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் அவர்களின் தலைமையில், இன்று (நவம்பர் 4) மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகக் கூட்ட அரங்கம், நந்தனத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தீபாவளிக்கு மொத்தம் 5 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட இருப்பதால், எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்து இயக்கப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு போக்குவரத்து துறை.

எந்தப் பேருந்து நிலையத்திலிருந்து எந்த ஊருக்குச் செல்லலாம்?

1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்:

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

2. CMDA காலநிலை பூங்கா அருகில் திறந்தவெளி இடம், கிளாம்பாக்கம் (தற்காலிக பேருந்து நிலையம்):

வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

3. மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம்:

கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மறைமலை நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். இங்கு தற்போது சோதனை அடிப்படையில் பேருந்து நிலையம் செயல்படுகிறது.

4. புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு:

கிழக்கு கடற்கரை (ECR), காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

5. மாதவரம் புதிய பேருந்து நிலையம்:

வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். இதுதவிர பொன்னேரி மற்றும் ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும்.

Special bus
Special bus
இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.! ஆவின் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.!
தீபாவளி சிறப்பு பேருந்துகள்

தேதி வாரியாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை:

நவம்பர் 5:

வழக்கமான பேருந்துகள் - 2,191

சிறப்பு பேருந்துகள் 2,316

தனியார் ஒப்பந்த பேருந்துகள் - 554

மொத்தம் - 5,061.

நவம்பர் 6:

வழக்கமான பேருந்துகள் - 2,191

சிறப்பு பேருந்துகள் 2,632

தனியார் ஒப்பந்த பேருந்துகள் - 608

மொத்தம் - 5,431.

நவம்பர் 7:

வழக்கமான பேருந்துகள் - 2,191

சிறப்பு பேருந்துகள் 2,479

தனியார் ஒப்பந்த பேருந்துகள் - 497

மொத்தம் - 5,167.

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இருந்து இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 26,139 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை - நவ. 7 வரை தான் டைம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தீபாவளி சிறப்பு பேருந்துகள்