

ஆந்திராவில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருவது அந்த மாநில மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது பூச்சிக் கடியால் பரவும் வழக்கமான தொற்றுதான். வருஷம்தோறும் வரக்கூடியது தான். ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் இதனால் உயிரிழப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இந்தாண்டு மட்டும், ‘ஸ்க்ரப் டைபஸ்’ தொற்று பாதித்த 9 பேர் இறந்திருப்பது கடும் அதிர்ச்சிய ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர சுகாதாரத்துறை இதுக்கு காரணம் புரியாம முழிச்சிக்கிட்டு இருக்காங்க.
2024-ம் ஆண்டு 1613 பேர் ‘ஸ்க்ரப் டைபஸ்’ தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு இதுவரை 1592 பேர் ‘ஸ்க்ரப் டைபஸ்’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சித்தூரை சேர்ந்த 420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த தொற்றுக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதேசமயம் இவர்கள் வேறு உடல்நலப்பிரச்சனைகள் அல்லது உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
முழுமையான காரணத்தை கண்டறிய மாநிலம் முழுவதும் 24 ஆய்வகங்களில் மரபணு வரிசைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் ‘ஸ்க்ரப் டைபஸ்’ புதிய வேரியண்டுகள் உருவாகியிருக்கிறதா என்று தெரியவரும். இல்லையென்றால் ஏற்கனவே உள்ள திரிபுகள் உருமாற்றம் அடைந்துள்ளதா என்பது குறித்தும் சுகாதாரத்துறை ஆய்வு செய்து கொண்டு வருகிறார்கள்.
‘ஸ்க்ரப் டைபஸ்’ பாதிப்பை எதிர்கொள்வதற்காக ஆந்திரா முழுவதும் சுகாதார மையங்களில் சுமார் 91 லட்சம் அசித்ரோமைசின் மாத்திரைகள், 81 லட்சம் டாக்ஸிசைக்ளின் மாத்திரைகள் இருப்பு வைத்துள்ளார்கள். நோய் தோற்று பாதித்தவர்களுக்கு ஆரம்பத்திலேயே அதை கண்டுபிடித்து கொடுக்கும் போது அது நம் உடலில் இருக்கும் பாக்டீரியாவை கொன்று விடும். அதனால் நோயாளிகள் இந்த அறிகுறிகளுடன் வரும் போதே உடனடியாக விநியோகிப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருந்துகளை தயாராக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்க்ரப் டைபஸ்' நோயை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சந்திரபாபு அதிகாரிகளை எச்சரித்தார். உடனடியாக தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் கலந்துரையாடி தீர்வு காண உத்தரவிட்டார்.
ரிக்கெட்ஸியா(Rickettais)பாக்டீரியா தொற்று பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மனிதர்களை கடிக்கும் போது ‘ஸ்க்ரப் டைபஸ்’ தொற்று பரவுவதாக கூறப்படுகிறது.
அறிகுறிகள்
* காய்ச்சல், தலைவலி, உடல் வலி
* பூச்சி கடித்த இடத்தில் எஸ்கார்(கருப்பு நிற புண்)
ஆனாலும் சில நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் கூட தெரியாது என்பதால் ‘ஸ்க்ரப் டைபஸ்’ தொற்று இருப்பதை கண்டுபிடிப்பதே சிரமமாக இருப்பதாக மருத்துவர்கள்கூறுகின்றனர்.
புதர் மண்டிய பகுதிகள், வனப்பகுதிகள், விவசாய நிலங்கள், மலையேற்றம் செல்வோர் ஆகியோருக்கு இந்த ‘ஸ்க்ரப் டைபஸ்’ தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாதிப்பு
பூச்சி கடித்த 10 நாட்களுக்குள் காய்ச்சல்
சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற புண் - இந்த புண் கழுத்து, அக்குள், கக்கம் ஆகிய பகுதிகளில் காணப்படும். பெண்களை பொருத்தவரை மார்பகங்களுக்கு அடியில் பார்க்கலாம்.
அறிகுறிகள் தெரிந்து சிகிச்சையில் காலதாமதம் ஏற்படும் போது இதயம், நுரையீரல், சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எறும்பு, கொசுக்கடித்து விட்டது என்று மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக காய்ச்சல் வந்த பிறகு கவனிக்காமல் விட்டு விட்டால் உயிருக்கே ஆபத்தாகவும் முடிய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது மிகவும் அரிதான நோய் தொற்று என்று கூற முடியாது. இது பொதுவான நோய் தொற்று தான். ஆனால் அதேசமயம் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை தொடங்க வேண்டும் இல்லையென்றால் உடல் உள்ளுறுப்புகள் முழுவதுமாக செயலிழந்து மரணத்தை கூட ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
யாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்
கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு, குறைப்பிரசவம் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சாதாரணமாக காய்ச்சல் வந்தால் தொண்டை வலி, சளி, இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். ஆனால் இப்படி எந்த எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் 102 டிகிரி காய்ச்சல், அதீத தலைவலி, உடல்வலி, சோர்வு, மூட்டுகளில் வலி இருந்தால் அது ‘ஸ்க்ரப் டைபஸ்’ தொற்று பாதிப்பாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது இந்த தொற்று மாநிலத்தின் பல மாவட்டங்களில் பரவியுள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 8 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் கடந்த 20 நாட்களில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் ஸ்க்ரப் டைபஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த தொற்று மாநிலத்தின் பல மாவட்டங்களில் பரவியுள்ளதாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 8 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாடு முழுவதும் கடந்த 20 நாட்களில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் ஸ்க்ரப் டைபஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்படுவதோடு, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.