

இன்று (நவம்பர் 11) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,920 குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.200-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில், தற்சமயம் அடுத்தடுத்த நாட்களில் குறைய வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. ஆனால் தங்கம் விலையில் ஏற்பட்ட இந்த சரிவு தற்காலிகமானது தான். வெகு விரைவிலேயே தங்கம் விலை உச்சபட்சமாக உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அப்படி விலை உயரும் போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 லட்சம் வரை கூட விற்பனையாக வாய்ப்புள்ளது. ஆகையால் தங்கம் வாங்க நினைப்பவர்கள் மற்றும் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இப்போதே தங்கத்தை வாங்குவது சிறந்தது எனக் கூறி வருகின்றனர். இப்போது தங்கத்தை வாங்கினால் அடுத்த ஆண்டு உங்களுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (நவம்பர் 9) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து ரூ.13,210-க்கும், ஒரு சவரன் ரூ.360 உயர்ந்து ரூ.1,05,680-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.205-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 11) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.195 குறைந்து ரூ.13,015-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,560 குறைந்து, ரூ.1,04,120-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,00,000-க்கு விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்றும் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த வாரம் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காரணமாக வரும் நாட்களில் தங்கம் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது விலை சரியும் போதே தங்கத்தை வாங்குவது தான் புத்திசாலித்தனம்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பிரபல முதலீட்டாளர் ராபர்ட் கியோசாகி ஒரு சவரன் தங்கம் விலை 2036 ஆம் ஆண்டில் ரூ.9 லட்சத்தை எட்டும் எனக் கணித்தார். அவர் கணிப்புக்குப் பிறகு தங்கம் விலை சரியத் தொடங்கியது. ஆனால் இன்று அவர் மட்டும் அல்ல, பல முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள் தங்கம் விலை உயரும் எனக் கணித்துள்ளனர்.
அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம் விலை தற்போதைய விலையை விட 9 மடங்கு உயர்ந்தால், அது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் கிடைத்தது போல. ஆனால் சாமானிய மக்களுக்கு பெருத்த அடியாக இருக்கும். ஆகையால் தங்கத்தை வாங்க நினைப்பவர்கள் இப்போதே வாங்கி விட்டால், வருங்காலத்தில் பல ஆயிரங்கள் அல்லது பல லட்சங்களை சேமித்ததற்கு சமமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.