செம சான்ஸ்.!! 3 நாட்களில் ரூ.3,520சரிவு.! தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்.!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 12) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,520 குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.200-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயரும் எனக் கணிப்புகள் வெளியான நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.1,920 வரை குறைந்துள்ளது. இந்த சரிவு தொடர வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் பொருளாதார வல்லுநர்களின் கணிப்புகள் இதற்கு நேர் எதிராக இருக்கின்றன.

நடப்பாண்டு முடிய இன்னும் 50 நாட்களே மீதமுள்ள நிலையில், அதற்குள் ஒரு சவரன் தங்கம் விலை தற்போதைய விலையில் இருந்து 46% உயரும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இது வெறும் கணிப்பு மட்டுமே. கணிப்புகள் மெய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

இருப்பினும் சந்தை நிலவரங்கள் எப்போது இறங்கும், எப்போது ஏறும் என்பதை சொல்ல முடியாது. ஆகையால் கையில் பணம் இருக்கும் போதே தங்க நகைகளை வாங்குவது நல்லது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 11) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.195 குறைந்து ரூ.13,015-க்கும், ஒரு சவரன் ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.200-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 12) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.200 குறைந்து ரூ.12,815-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,600 குறைந்து, ரூ.1,02,520-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி 1 கிராம் ரூ.200-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,00,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இதன்மூலம் விலை உயரும் என்ற வல்லுநர்களின் கணிப்பு பொய்யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை
Gold Price Today
இதையும் படியுங்கள்:
பங்குச்சந்தை முதலீடு - வாரன் பஃபெட் கூறும் ஆலோசனைகள்...
தங்கம் விலை

தீபாவளி பண்டிக்கைக்குப் பிறகு தங்கத்தின் விலை உயரத் தொடங்கியது. ஆனால் கடந்த 2 நாட்களாக விலை சரிந்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை 46% உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்தக் கணிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 6,000 டாலர்களை எட்டும் எனக் கூறப்படுகிறது. இது நடந்தால் இந்திய சந்தையில் ஒரு சவரன் ரூ.1.50 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளது.

உலக நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகள், தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருவது, சர்வதேச பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையை எடுத்துக் காட்டுகிறது. அதோடு முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் தங்கள் கவனத்தை மீண்டும் திருப்பினால், இந்த விலை உயர்வு சாத்தியமாகும் என சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சேமிப்புக் கணக்கில் பணம் இருக்கா? அப்போ இப்படி முதலீடு செய்யுங்க!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.