திருமண வீட்டாருக்கு ஜாக்பாட்! 5 நாட்களில் ரூ.5,120 சரிவு.! உடனே நகைக் கடைக்கு கிளம்புங்க.!!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 14) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.640 குறைந்து ரூ.1,00,920-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,120 குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.195-க்கு விற்பனையாகிறது.

2026-ம் ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை உயர்ந்து விடும் என கணிப்புகள் வெளியான நிலையில், தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த சரிவு பொருளாதார நிபுணர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும் சூழலில், முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் தங்கத்தைப் பொறுத்தவரை விலை சரிவும், உயர்வும் தற்காலிகமானது தான்.

தங்கம் விலை எப்போது உயரும், எப்போது சரியும் என்று கணிப்பது சாதாரணமானது அல்ல. அப்படியே கணித்தாலும் சில சமயங்களில் கணிப்புகள் மெய்யாகவும் வாய்ப்புள்ளது; பொய்யாகவும் வாய்ப்புள்ளது.

2026 ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒன்றரை மாதம் இருககும் சூழலில் அதற்குள் தங்கம் விலையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 13) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.120 குறைந்து ரூ.12,695-க்கும், ஒரு சவரன் ரூ.960 குறைந்து ரூ.1,01,560-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.195-க்கு விற்பனையானது

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 14) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ரூ.12,615-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.640 குறைந்து, ரூ.1,00,920-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி 1 கிராம் ரூ.195-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.1,95,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை
Gold Price
இதையும் படியுங்கள்:
வீட்டு மாடியில் சோலார்: PM சூர்யா கர் திட்டத்தில் எவ்வளவு மானியம்? தகுதிகள் என்னென்ன?
தங்கம் விலை

தங்கம் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.4,480 வரை சரிந்துள்ளது. இந்த சரிவின் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே இறங்கும் சூழல் மறுபடியும் உருவாகியுள்ளது. அப்படி ஒருவேளை விலை குறைந்தால், அது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

தமிழ்நாட்டில் தற்போது திருமண சீசன் களை கட்டியிருக்கும் நிலையில், தங்கம் விலை குறைந்து வருவது பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கு நறசெய்தியாகும். ஒருபுறம் தங்கம் விலை இன்னமும் 25% குறையும் என்ற கணிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் விலை உயரும் என்ற கணிப்புகளும் வெளியாகியுள்ளன. இதில் எது நடக்கப் போகிறது; எந்தக் கணிப்பு பொய்யாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தங்கம் விலை குறையும் பட்சத்தில் ஆபரண நகையாக வாங்குவது நல்லது. ஒருவேளை உயர்ந்து விட்டால், தங்கத்தை ஒரு முதலீட்டுப் பொருளாக பார்ப்பதே சிறந்தது

இதையும் படியுங்கள்:
டாக்ஸி புக்கிங்கில் மெகா தில்லுமுல்லு! சிக்கியது ஓலா.! இனி 1 ரூபாய் கூட எக்ஸ்ட்ரா கொடுக்க வேண்டாம்!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.