சூப்பர் குட் நியூஸ்.! இன்றும் சரிந்தது தங்கம், வெள்ளி விலை.. நஷ்டம் யாருக்கு? லாபம் யாருக்கு?

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 16) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.600 குறைந்து ரூ.1,00,320-க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,720 குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.190-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த வாரத்தில் ஏற்றத்துடன் தொடங்கினாலும், அடுத்தடுத்த நாட்களில் விலை சரிந்தது. ஒட்டுமொத்தமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.4,640 வரை குறைந்தது. இதனால் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சம் என்ற நிலைக்கு வந்துள்ளது.

கடந்த வாரமே ரூ.1 லட்சத்துக்கு கீழே சரிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் இந்த அளவிற்கு விலை சரிந்ததே இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரமும் கடந்த வாரத்தைப் போலவே விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது மட்டும் நடந்தால் இந்த வாரமே தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்குள் குறைந்து விடும்.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 15) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை ஒரு கிராம் மாற்றமின்றி ரூ.12,615-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,920-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.195-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 16) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75 குறைந்து ரூ.12,540-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.600 குறைந்து, ரூ.1,00,620-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.190-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1,90,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold & Silver Price
Gold & Silver
இதையும் படியுங்கள்:
6 மணி நேரப் போராட்டம், 30 மருத்துவர்களின் கூட்டு முயற்சி: தாயின் கருவறையில் அதிசய அறுவை சிகிச்சை!
தங்கம் விலை

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, தற்காலிகமானது தான் எனக் கூறப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் விலை உயரும் என்றே பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக 2026 ஆம் ஆண்டு முடிவதற்குள் தங்கத்தின் விலை தற்போதைய விலையில் இருந்து 50% உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது விலை குறைந்து ரூ.1 லட்சம் என்ற எல்லையில் இருக்கும் தங்கம் விலை, உயருமா அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்ததால், தங்கம் பற்றிய பேச்சுகள் தான் இணையத்தில் அதிகமாக உலா வந்தன. இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் குறைந்து, பழைய விலைக்கே போகுமா என்ற எதிர்பார்ப்பில் சாமானிய மக்கள் இருக்கின்றனர். விலை சரிந்தால் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். ஆனால் தங்கம் வாங்க நினைக்கும் இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த சரிவு லாபத்தைக் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
சரித்திரம் படைத்த SpaceX: பூமியில் தரையிறங்கிய ராக்கெட்.! இனி விமானம் போல ராக்கெட்டும் பறக்கும்.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.