

விண்ணுலகை ஆராய்ச்சி செய்ய இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பல உலக நாடுகள் செயற்கைகோள்களை ஏவி வருகின்றன. தொடக்கத்தில் விண்ணில் உள்ள கோள்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள், அதற்குப் பின் சூரியன் மற்றும் நிலவு என தங்கள் ஆராய்ச்சியை விரிவு செய்தனர். இப்போது விண்ணிலேயே சர்வதேச விண்வெளி மையத்தையும் அமைத்து ஆராய்ச்சிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
பொதுவாக பூமியில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டை மீண்டும் பூமிக்குத் திரும்புவதில்லை. ஆனால் உலக வரலாற்றில் முதன்முறையாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெற்றியையும் கண்டுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான SpaceX.
இதன்படி விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட்டை பாதுகாப்பாக பூமியில் தரையிறக்கி சாதனை படைத்தது SpaceX நிறுவனம்.
நேற்று (நவம்பர் 14) அதிகாலை 04:15 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது STARSHIP 15 விண்கலம். இந்த விண்கலம் இந்திய வான்பரப்பை பலமுறைச் சுற்றி வந்த நிலையில், இந்தியர்கள் வெறும் கண்களால் பார்க்கும் வாய்ப்பு பலருக்கும் கிடைத்தது. மேலும் கடந்த 22 மணி நேரத்தில் மட்டும் பூமியை 14 முறை சுற்றி வந்துள்ளது STARSHIP 15 விண்கலம்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 15) பூமியில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, ஏவுதளத்தில் உள்ள இயந்திர கரங்களைப் பிடித்துக் கொண்டது இந்த விண்கலம். வரலாற்றில் இப்படியொரு சாதனையை வேறு எந்த ஒரு விண்வெளி நிறுவனமும் செய்ததே இல்லை. ஆகையால் தான் இன்று SpaceX நிறுவனத்தின் சாதனை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த சாதனையின் மூலம் இனி மற்ற விண்வெளி நிறுவனங்களும் ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு கொண்டு வர முயற்சி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
STARSHIP 15 விண்கலம் விண்ணிற்கு வெற்றிகரமாக சென்ற பிறகு, தரையிறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதலில் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டதால், விண்கலத்தின் SUPER HEAVY BOOSTER-ஐ ஏவுதளத்தில் பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. இதனால் விண்கலத்தை கடலில் இறக்கினர் SpaceX விஞ்ஞானிகள்.
விண்கலம் ஏவுதளத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு முன்பு பூமியை 14 முறை சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. SpaceX நிறுவனத்தின் இந்த மாபெரும் சாதனை விண்வெளி தொழில்நுட்ப உலகில் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
ஏவுதளத்தில் இருக்கும் இயந்திர கரங்களைக் கொண்டு விண்கலத்தை வெற்றிகரமாக பிடிக்கும் இந்தத் தொழில்நுட்பம், வருங்காலத்தில் விண்வெளிப் பயணச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும். அதோடு ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது என்பதால், விஞ்ஞானிகளுக்கு நேரம் மிச்சமாவதோடு, ராக்கெட் தயாரிப்பு செலவும் குறையும்.
ராக்கெட்டுகள் பொதுவாக கடலில் இருக்கும் மிதப்படை அல்லது தரையிலோ உள்ள கால்கள் மூலம் தரையிறங்கும்.
ஆனால், ஸ்டார்ஷிப் ஏவுதளத்தில் உள்ள ‘மெக்காஸில்லா’ என்ற பிரம்மாண்ட கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள Chopsticks என்ற இயந்திர கால்கள் விண்வெளியில் இருந்து திரும்பும் ராக்கெட்டை காற்றில் மிகத் துல்லியமாக பிடித்துக் கொள்ளும். இதனால் ராக்கெட்டில் கூடுதல் கால்களை பொருத்த வேண்டிய அவசியமே இல்லை என்பதால், எடையும் குறையும்.
இனி விமானங்களைப் போலவே, ராக்கெட்டுகளையும் தரையிறக்கிய சில மணி நேரங்களிலேயே எரிபொருள் நிரப்பி மீண்டும் பறக்கச் செய்வதே ஸ்பேஸ்எக்ஸின் குறிக்கோள்.