

இன்று (நவம்பர் 17) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.560 குறைந்து ரூ.99,760-க்கு விற்பனையாகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,280 குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.190-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை இந்த ஆண்டில் 2வது முறையாக ரூ.1 லட்சத்துக்கு கீழே விற்பனையாகிறது.
தங்கம்ல விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், மேலும் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.78,000 வரை குறையும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தக் கணிப்பு பலித்து விட்டால் இந்திய சந்தையில் தங்க விற்பனை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தங்கத்தை இப்போதே வாங்கலாமா அல்லது காத்திருக்காலாமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தங்கம் வாங்கிய பிறகு, மீண்டும் விலை குறைந்து விட்டால் நஷ்டமாகி விடுமோ என்ற எண்ணம் பலருக்கும் வந்துள்ளது. ஆனால் விலை எப்போது உயரும், எப்போது குறையும் என்பதை யாராலும் சரியாக சொல்ல முடியாது. ஆகையால் தங்கம் விலை குறையும் போதே வாங்கி விடுவது நல்லது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்: நேற்று (நவம்பர் 16) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.75 குறைந்து ரூ.12,540-க்கும், ஒரு சவரன் ரூ.600 குறைந்து ரூ.1,00,320-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.190-க்கு விற்பனையானது
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 17) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து ரூ.12,470-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.560 குறைந்து, ரூ.99,760-க்கு விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி 1 கிராம் ரூ.190-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.1,90,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டம் ஏற்ட்டுள்ளது. இருப்பினும் திடீரென விலை ஏறினால் இந்த நஷ்டம் எல்லாம் காணாமல் போய்விடும்.
சாமானிய மக்கள் தங்கத்தை ஆபரண நகையாக வாங்குவதோடு, முதலீட்டிலும் கவனம் செலுத்துவது நல்லது. வருங்காலத்தில் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஒரு சவரன் தங்கத்தை வாங்குவதே கடினமாகி விடும்.
தங்க முதலீடு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படும் நிலையில், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சாமானிய மக்களும் தங்கத்தை முதலீடாக கருதினால், வருங்கால நிதித் தேவைகளை சமாளிக்க முடியும்.
ஒருவேளை உங்கள் முதலீடு தங்கமாக இல்லாமல், அஞ்சல் அலுவலகத் திட்டங்களாக இருந்தால் தங்கம் விலையைப் பற்றி கவலைப்ட வேண்டியதில்லை. இருப்பினும் வருங்காலத்தில் உறவினர்களுக்கு சீர் செய்வதற்கு தங்கம் வாங்க நினைத்தால், இப்போதே வாங்கி விடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.