வாக்காளர்களே உஷார்.! இரட்டை பதிவு இருந்தால் குற்றவியல் வழக்கு பாயுமா? தேர்தல் ஆணையம் சொல்வது என்ன?

பெயர் நீக்கப்பட்டவர்கள் டிசம்பர் 11-க்குள் படிவம் 6 மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
இரட்டைப் பதிவு
Voters ID
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த ஆண்டு சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்தப் பணிகளில் இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பல லட்சம் பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் 12-ம் தேதி வெளியானது. இதில் 2,82,03,992 ஆண் வாக்காளர்களும், 2,95,34,734 பெண் வாக்காளர்களும், 7,892 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் டிசம்பர் 11 கடைசி தேதியாகும். விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிவுகள் டிசம்பர் 28-ல் வெளியாகி, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ம் தேதி வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரே வாக்காளரின் பெயர் ஒரே தொகுதியில் அல்லது வெவ்வேறு தொகுதிகளில் இருந்தால் குற்றவியல் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கம்:

SIR நடவடிக்கையின் போது இரட்டைப் பதிவு, இடம் பெயர்ந்தவர் மற்றும் உயிரிழந்தவர் என வகைப்படுத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து பலர் நீக்கப்பட்டனர்.

பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் படிவம் 6-ஐ சமர்ப்பித்து, மீண்டும் இணையலாம். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள், படிவம் 6-ஐ சமர்ப்பித்தால் எவ்வித குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

ஒரே மாநிலத்தில் வெவ்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் படிவம் 8-ஐ சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

வாக்காளர்கள் செய்ய வேண்டியவை:

voters.eci.gov.in/ECINET என்ற இணையதளத்திற்குச் சென்று உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளதா அல்லது இரட்டைப் பதிவில் உள்ளதா அல்லது சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

ஒருவேளை இரட்டைப் பதிவு என கருதப்பட்டு தவறுதலாக வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால், வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6-ஐ உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒருவேளை உங்கள் பெயர் 2 தொகுதிகளில் பதிவாகி இருந்தாலோ அல்லது ஒரே தொகுதியில் இருமுறை பதிவாகி இருந்தாலோ, அதில் ஒன்றை நீக்கவது கட்டாயமாகும். இதற்கு படிவம் 7-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் மற்றும் பெயர் திருத்தம் செய்ய படிவம் 8-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

Special Camp for Voters in Tamilnadu
Special Camp for Voters
இதையும் படியுங்கள்:
சூப்பர் குட் நியூஸ்.! இன்றும் சரிந்தது தங்கம், வெள்ளி விலை.. நஷ்டம் யாருக்கு? லாபம் யாருக்கு?
இரட்டைப் பதிவு

வாக்காளர் பட்டியலில் ஒரு சிலரின் பெயர் தவறுதலாக இரட்டைப் பதிவு எனக் கருதப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. இதற்காக வாக்காளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமோ என்ற பயம் அதிரித்துள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ள நிலையில், வாக்காளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என உறுதி அளித்துள்ளது. ஆகையால் வாக்காளர்கள் படிவம் 6-ஐ நிரப்பி மீண்டும் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
சரித்திரம் படைத்த SpaceX: பூமியில் தரையிறங்கிய ராக்கெட்.! இனி விமானம் போல ராக்கெட்டும் பறக்கும்.!
இரட்டைப் பதிவு