செம சான்ஸ்.! ஒரேநாளில் ரூ.2,040 சரிந்த தங்கம் விலை.! இன்னும் எவ்வளவு குறையும்?

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 18) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.2,040 குறைந்து ரூ.97,720-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.185-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை எப்போது ரூ.1 லட்சத்திற்கு கீழே வரும் எனக் காத்திருந்த சாமானிய மக்களுக்கு நேற்று ஜாக்பாட் அடித்தது. கிடட்த்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே சரிந்தது.

இந்த சரிவு அப்படியே தொடர வேண்டும் என்பதே பலருடைய விருப்பம். ஆனால் தொடர் சரிவில் தங்கம் விலை நீடிக்குமா அல்லது மீண்டும் உயர்வை சந்திக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இருப்பினும் ஒரு வழியாக தங்கம் விலை சரிந்தது பலருக்கும் மகிழ்ச்சி தான். தங்கத்திற்கு ஈடு இணையாக வெள்ளி விலையும் சரிந்து வருகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2 லட்சத்துக்கு கீழே சரிந்திருபபதும் நல்ல செய்தி தான். இந்த விலை சரிவு முதலீட்டாளர்களுக்கு மட்டுமே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 17) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.12,470-க்கும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.99,760-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.190-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 18) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.255 குறைந்து ரூ.12,215-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,040 குறைந்து, ரூ.97,720-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.185-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1,85,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை
Gold Price
இதையும் படியுங்கள்:
அஞ்சலக மாத வருமானத் திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் மாதம் எவ்வளவு கிடைக்கும்? யாரெல்லாம் சேரலாம்?
தங்கம் விலை

தங்கம் விலை நடப்பாண்டு இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை எட்டும் என்ற கணிப்புகள் சமீபத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தின. இருப்பினும் மற்றொரு தரப்பினர் தங்கம் விலை சரியும் எனக் கணித்தனர். அதற்கேற்ப தற்போது விலை சரிந்து வருகிறது.

இருப்பினும் தங்கம் விலை சரிவது தொடருமா என்று கேட்டால், அதனை உறுதியாக சொல்ல முடியாது. சர்வதேச சந்தை நிலவரங்களும், போர்ச் சூழலும் மாறினால் விலை உயர வாய்ப்புள்ளது. அதுவரை தற்போதைய சூழலில் விலை குறையும் என்றே சொல்லப்படுகிறது. ஒரு சவரன் விலை ரூ.78,000 வரை குறையும் என்ற கணிப்புகள் வெளியாகி இருப்பதால், தங்க நகையை இப்போதே வாங்கலாம் அல்லது காத்திருக்கலாமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

பொதுவாக முதலீடு செய்பவர்கள் விலை சரியும் போது, முதலீடுகளை மூடுவது வழக்கம். ஆனால் விலை சரியும் போது அதிகமாக முதலீடு செய்வது தான் நல்ல பலனைத் தரும் என வெற்றிகரமான முதலீட்டாளர்கள் கூறியுள்ளனர். ஆகையால் இம்முறை தங்க முதலீடுகள் குறையுமா அல்லது உயருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஒருவேளை முதலீடுகள் குறைந்தால், தங்கம் விலை மேலும் சரியும்.

இதையும் படியுங்கள்:
8வது ஊதியக் குழு: ரூ.25,000 பென்ஷன் ரூ.87,500 ஆக உயருமா? - உண்மை நிலவரம் என்ன!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.