பறவைக் காய்ச்சலை ஒழிக்க இந்தியாவின் முதல் H5N1 தடுப்பூசி அறிமுகம்!

நவம்பர் 20-ம் தேதி மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்; 6 மாதம் பாதுகாப்பு!
பறவைக் காய்ச்சல்
Bird Flu
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

பருவ காலத்திற்கு ஏற்ப வைரஸ் பாதிப்புகள் பரவுவது வழக்கமானது தான். இருப்பினும் தற்போது இந்தியா முழுக்க பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், கோழிகள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன. இதனால் கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட H5N1 தடுப்பூசியை வருகின்ற நவம்பர் 20-ம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை அறிமுகம் செய்கிறார். ​

போபாலில் இருக்கும் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் தடுப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தத் தடுப்பு மருந்து, H5N1 வைரஸுக்கு எதிராக செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் தீவிரமடைந்து வரும் சூழலில், உள்நாட்டு தடுப்பு மருந்து அறிமுகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது உயிரற்ற அல்லது பெருக்கமடையாத வைரஸ்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘செயலிழக்கப்பட்ட தடுப்பூசி’ என்பதால், இதன் மூலம் கோழிகளுக்கு வேறு எந்தத் தொற்றும் ஏற்படாது.

எந்த வைரஸ் வகைக்கு எதிராக செயல்படும்?

இந்தியாவில் கோழிகளைத் தாக்கி உயிரிழக்கச் செய்யும் பறவைக் காய்ச்சல் (Highly Pathogenic Avian Influenza) பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் ‘Clade 2.3.2.1a’ என்ற H5N1 வைரஸுக்கு எதிராக செயல்படும் வகையில் தடுப்பூசி பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மற்றும் இந்திய அளவில் இதற்கு முன்பு வரை ‘Clade 2.3.2.1a’ வைரஸ் வகைக்கு எதிரான தடுப்பு மருந்து எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

H5N1 தடுப்பு மருந்தின் சிறப்பம்சங்கள்:

* கோழிகளுக்கு ஒரே ஒரு முறை H5N1 டோஸ் தடுப்பு மருந்தை செலுத்தினால், அது அடுத்த 6 மாதங்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கும்.

* இந்தத் தடுப்பூசி முட்டையிடும் மற்றும் இனப்பெருக்க கோழிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

* தடுப்பூசி போடப்பட்ட கோழிகள் மற்றும் இயற்கையாக நோய்த்தொற்று ஏற்பட்ட கோழிகளை ரத்தப் பரிசோதனை மூலம் எளிதில் வேறுபடுத்த முடியும்

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்
இதையும் படியுங்கள்:
செம சான்ஸ்.! ஒரேநாளில் ரூ.2,040 சரிந்த தங்கம் விலை.! இன்னும் எவ்வளவு குறையும்?
பறவைக் காய்ச்சல்

தடுப்பு மருந்து ஏன் முக்கியம்:

* பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்ட கோழிகள் 100% வரை உயிரிழக்க வாய்ப்புள்ளது. இந்நேரத்தில் பரவலைக் கட்டுப்படுத்த லட்சக்கணக்கிலான கோழிகளை மொத்தமாக அழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

* கடந்த 2006-ம் ஆண்டு ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் பரவலால், இந்தியாவிற்கு ரூ.2,200 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. தடுப்பூசி அறிமுகமாவதால் இனி இதேபோன்ற ஒரு பொருளாதார இழப்பு ஏற்படாது.

* தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பறவைக் காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கோழிப் பண்ணை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கோழி இறைச்சி மற்றும் முட்டை விநியோகச் சங்கிலி பாதிப்படையாமல் இருக்கவும் உள்நாட்டுத் தடுப்பூசி உதவியாக இருக்கும்.

* இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘Clade 2.3.2.1a’ வகை வைரஸ், கடந்த சில நாட்களில் கோழிகள் மட்டுமின்றி பாலூட்டிகள் மற்றும் 3 மனிதர்களிடமும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே கோழிகளிடம் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவலைத் தடுப்பது, மனித உயிர்களைப் பாதுகாப்பிற்கு நல்லது.

இதையும் படியுங்கள்:
மகளிர் உரிமைத் தொகை: நவம்பர் மாதப் பட்டியல் வெளியீடு – உங்கள் பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?
பறவைக் காய்ச்சல்