மகளிர் உரிமைத் தொகை: நவம்பர் மாதப் பட்டியல் வெளியீடு – உங்கள் பெயர் உள்ளதா? சரிபார்ப்பது எப்படி?

குடும்பத் தலைவிகளுக்கு முக்கிய அறிவிப்பு: நவம்பர் மாத உரிமைத் தொகை விடுவிப்பு & ரூ.2,500 உயர்வு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!
மகளிர் உரிமைத் தொகை
Magalir Urimai Thogai
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தை ஆளும் தவெக அரசும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியின் படி மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக எப்போது உயர்த்தி வழங்கபடும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தேர்தலின் போது தெரிவித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இதனாலேயே தற்போது மகளிர் உரிமைத் தொகையும் விரைவில் உயர்த்தி தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் மற்றும் வெற்றிப் பயணம் திட்டம் அறிவிகக்ப்பட்டு செயல்பாட்டில் உள்ள நிலையில், அண்ணன் சீர் திட்டமும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மகளிர் உரிமைத் தொகை விரைவில் உயர்த்தப்பட உள்ளது.

இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 15-ம் தேதி ரூ.1,000 நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மகளிர் உரிமைத் தொகையை முன்னரே விடுவிக்கப்படும் என செய்திகள் பரவின.

ஆனால் இதுகுறித்த எவ்வித பரிசீலனையும் அரசு தரப்பில் முன்னெடுக்கபப்டவில்லை என்பதால், பொதுமக்கள் இதை யாரும் நம்ப வேண்டாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாத உரிமைத் தொகை விடுவிக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பயனாளிகள் பட்டியல் மற்றும் நிலையைச் சரிபார்க்கும் முறை:

* தமிழக அரசின் kmut.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

* முகப்புப் பக்கத்தில் இருக்கும் (Check Status / Payment Status) என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

* குடும்ப அட்டை எண் அல்லது உங்களின் ஆதார் எண்ணை உள்ளிட்டு, திரையில் தெரிகின்ற கேப்ட்சா குறியீட்டை நிரப்பினால், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும்.

* ஓடிபி-ஐ எண்டர் செய்து உள்நுழைந்த பிறகு, உங்கள் விண்ணப்பத்தின் நிலை மற்றும் நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

November Month
Magalir Urimai Thogai
இதையும் படியுங்கள்:
செம சான்ஸ்.! ஒரேநாளில் ரூ.2,040 சரிந்த தங்கம் விலை.! இன்னும் எவ்வளவு குறையும்?
மகளிர் உரிமைத் தொகை

உதவி எண்கள்:

பயனாளிகள் பட்டியலில் பெயர் இருந்தும் பணம் வரவவில்லை என்றாலோ அல்லது பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ அருகிலுள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். மேலும் 1100 மற்றும் 044-25619208 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பயனாளிகளின் வங்கிக் கணக்கு IFSC குறியீட்டுப் பிழைகள் மற்றும் தொழில்நுட்பப் பிழைகளை மாவட்ட வாரியாக சரிசெய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் முடிந்த பிறகே உரிமைத் தொகையை உயர்ததுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும். அதுவரை வழக்கமான நடைமுறைப்படி ரூ.1,000 உரிமைத் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
8வது ஊதியக் குழு: ரூ.25,000 பென்ஷன் ரூ.87,500 ஆக உயருமா? - உண்மை நிலவரம் என்ன!
மகளிர் உரிமைத் தொகை