புயலில் சிக்கிய தங்கம்.! கண்ணிமைக்கும் நேரத்தில் எகிறியது ரேட்.!!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 2) 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.200-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த வாரத் தொடக்கத்தில் மெல்ல மெல்ல விலை உயர்ந்தது. ஆனால் வாரத்தின் கடைசி 2 நாட்களில் தங்கத்தின் விலை மளமளவென சரிந்தது. இதன்படி கடந்த வாரத்தில் மட்டும் ஏற்ற இறக்கத்துடன் ஒட்டுமொத்தமாக ஒரு சவரன் தங்கம் ரூ.2,720 வரை சரிந்தது. இந்த சரிவின் காரணமாக தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வரும் என்ற எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த வாரத்தில் தங்கத்தின் விலை குறையும் பட்சத்தில், தங்கம் விலை 4 இலக்க எண்களுக்கும் அடங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விடும். தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.20,000 வரை சரிந்தது. இந்த சரிவால் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2 லட்சமாக இருக்கிறது. விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

மாதத்தின் முதல் நாளான நேற்று (நவம்பர் 1) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.12,730-க்கும், ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.200-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 2) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்து, ரூ.1,02,200-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.200-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,00,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Gold & Silver Price
Gold & Silver
இதையும் படியுங்கள்:
பழைய கம்பெனி பிஎஃப் பணத்தை எடுக்கலையா? முடங்கிய பணம் நேரா வங்கி கணக்கிற்கு வரும்: EPFO புது ரூல்ஸ்!
தங்கம் விலை

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவுக்கு அமெரிக்க மற்றும் இந்திய வட்டி விகிதங்கள் அதிகரித்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. வட்டி விகித உயர்வால் டாலரின் மீதான முதலீடுகள் உயரத் தொடங்கியுள்ளன. இதுமட்டுமின்றி நாளை (நவம்பர் 3) அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலின் முடிவுகளும் தங்கத்தின் விலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மிகப்பெரிய சரிவை எதிர்பார்த்த நடுத்தர வர்க்கத்தினருக்கு தற்போதைய விலை நிலவரம் ஆறுதலான மனநிலையைக் கொடுத்துள்ளது. அடுத்த சில நாட்களிலும் தங்கத்தின் விலை குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், நகை வாங்க நினைப்போர் சற்று காத்திருப்பது நல்லது.

தங்கம் மற்றும் வெள்ளியில் நடப்பாண்டு முதலீடு செய்தவர்களுக்கு விலை சரிவால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டே விலை குறைவாக இருந்த போது முதலீடு செய்தவர்களுக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கிராமப்புற பெண்களுக்கு பம்பர் பரிசு! இலவசமாக 5 ஆடுகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதி என்ன?
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.