பழைய கம்பெனி பிஎஃப் பணத்தை எடுக்கலையா? முடங்கிய பணம் நேரா வங்கி கணக்கிற்கு வரும்: EPFO புது ரூல்ஸ்!

வாட்ஸ்அப் மூலம் சேவைகள் மற்றும் முடங்கிய PF தொகையை எளிதாகப் பெறும் அதிரடி நடைமுறை அமல்.
Pending PF Money
PF Monry
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

நாட்டில் மாதச் சம்பளம் வாங்குவோரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, மாதந்தோறும் சம்பளத்தில் இருந்து ஒரு சிறிய தொகை EPFO நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்படுகிறது. கடந்த 1952-ம் ஆண்டு ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (Employees' Provident Fund Organisation) தொடங்கப்பட்டது.

‘ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம், 1952’ மார்ச் 4-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 1952 நவம்பர் 1-ம் தேதி, முதன்முறையாக பணியாளர்களின் கணக்கில் இருந்து PF தொகை பிடித்தம் செய்யப்பட்டது. இந்த தினத்தை தான் ஆண்டுதோறும் நிறுவன தினமாகக் கொண்டாடி வருகிறது EPFO நிறுவனம்.

இன்று (நவம்பர் 1) EPFO நிறுவனத்தின் 74-வது ஆண்டு நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது. நிறுவன தினத்தை முன்னிட்டு EPFO பயனாளர்களுக்கு 2 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்வோருக்கு மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் PF தொகை, வருங்காலத்தில் நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க உதவியாக இருக்கும். ஆனால் EPFO விதிகளை பயனாளிகள் முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம்.

முன்பெல்லாம் PF பணத்தை எடுப்பதற்கு வாரக் கணக்கில் நேரம் எடுக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் நொடிப் பொழுதில் PF பணத்தை எடுக்க ATM அனுமதி வழங்கும் ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் PF கணக்கில் திருத்தங்களை மேற்கொள்வதும், பணி மாறுதலின் போது PF கணக்குகளை இணைப்பதும் தற்போது மிகவும் எளிதான விஷயமாகும். இந்நிலையில் 74-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு PF வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

1. வாட்ஸ்அப் சாட் மூலம் எளிதான அணுகல்:

PF இருப்புத் தொகை, ஆதார் - UAN இணைப்பு மற்றும் கோரிக்கை நிலையை அறிந்து கொள்ள பயனாளிகள் இனி EPFO அலுவலகம் வரத் தேவையில்லை. இனி வாட்ஸ்அப் சாட் மூலமே PF சேவைகளைப் பெறலாம். UAN எண்ணை ஆக்டிவேட் செய்யவும், ஆதார் பிழையை சரிசெய்யவும் வாட்ஸ்அப் ஹெல்ப்டெஸ்க் வாயிலாக வழிகாட்டுதலைப் பெறலாம்.

ஒவ்வொரு மண்டல அலுவலகத்திற்கும் தனித் தனி வாட்ஸ்அப் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தானியங்கி சேவையின் மூலம் விரைவில் புகார்களுக்கு தீர்வு காண முடியும்.

PF Money
PF Account
இதையும் படியுங்கள்:
கிராமப்புற பெண்களுக்கு பம்பர் பரிசு! இலவசமாக 5 ஆடுகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தகுதி என்ன?
Pending PF Money

2. செயல்படாத PF கணக்குகளில் உள்ள பணத்திற்கு தீர்வு:

பொதுவாக பணி மாறுதலின் போது, முந்தைய நிறுவனத்தின் PF விவரங்களை புதிய நிறுவனத்துடன் இணைக்க வேண்டும். ஆனால் ஒருசில ஊழியர்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என இதனை செய்யாமல் மறந்து விடுகின்றனர்.

இதனால் இந்தக் கணக்கு செயல்பாடாத கணக்கு வகையில் சேர்ந்து விடுவதால், பழைய நிறுவனத்தில் பிடித்தம் செய்யப்பட்ட PF பணத்தை எடுக்க முடியாத சூழல் உருவாகும். இந்நிலையில் இனி செயல்படாத PF கணக்குகளில் உள்ள PF பணத்தை EPFO நிறுவனமே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு பயனாளியின் PF கணக்கில் eKYC முடித்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

செயல்படாத கணக்குகளின் பயனாளிகளின் 58 வயது வரை வட்டி கணக்கீடு செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தத் தானியங்கித் தீர்வின் மூலம், ரூ.50,000 வரையிலான பணத்திற்கு படிவங்கள் சமர்ப்பிப்பு ஏதும் தேவைப்படாது. அதற்கும் மேற்பட்ட தொகைக்கு EPFO நிறுவனம் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

இதையும் படியுங்கள்:
குடும்ப பென்சன் யாருக்கு..? 2 மனைவிகள் இருந்தால் PF குடும்ப பென்சன் யாருக்கு கிடைக்கும்?
Pending PF Money