15 நாட்களில் ரூ.15,000 சரிவு.! தங்கத்தில் முதலீடு செய்ய இதுவே பொன்னான நேரம்.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

Kiஇன்று (நவம்பர் 19) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.175-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை 15 நாட்களில் 15,000 ரூபாய் சரிந்துள்ளது.

தங்கம் விலை கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1.30 லட்சத்தை எட்டியது. ஆனால் இன்றைய விலையுடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட ரூ.35,000 சரிந்துள்ளது. தங்கம் விலையின் இந்த திடீர் சரிவு பலருக்கும் இன்ப அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு மேலும் தொடருமா அல்லது மீண்டும் உயருமா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.

தற்போது தங்கம் விலை குறைவதற்கு மிக முக்கியமான காரணம் அமெரிக்காவின் பணவீக்கம் உயர்ந்திருப்பது தான் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய பெடரல் வங்கியின் வட்டி வீதத்தை அமெரிக்கா கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்த்தியது.

இந்நிலையில் அடுத்த மாதமும் வட்டி விகிதத்தை உயர்த்த அமெரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. இதனால் டிசம்பர் முதல் ஜனவரி வரை தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 18) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.235 குறைந்து ரூ.11,980-க்கும், ஒரு சவரன் ரூ.1,880 குறைந்து ரூ.95,840-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.180-க்கு விற்பனையானது

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 20) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.470 குறைந்து ரூ.11,510-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.3,760 குறைந்து, ரூ.92,080-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.175-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.1,75,000-க்கு விற்பனையாகிறது.

gold price
gold rate
இதையும் படியுங்கள்:
சரித்திரம் படைத்த SpaceX: பூமியில் தரையிறங்கிய ராக்கெட்.! இனி விமானம் போல ராக்கெட்டும் பறக்கும்.!
தங்கம் விலை

தற்போதைய சூழலில் தங்கம் விலை ரூ.90,000 வரை குறையும் என கூறப்படுகிறது. இருப்பினும் மீண்டும் அடுத்த ஆறு மாதத்திற்குள் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆகையால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இதுவே பொன்னான நேரம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பை பலப்படுத்தும் முயற்சியில், அந்நாட்டின் மத்திய பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இநத உயர்வு 0.25% முதல் 0.5% வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலை சரியும் என்பது உறுதியாக இருக்கும் சூழலில், விலை சரிவை சீனா விரும்பாது எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே சந்தையில் இருந்து அதிகப்படியான தங்கத்தை இறக்குமதி செய்திருக்கும் சீனா, தற்போதைய விலை சரிவைப் பயன்படுத்தி மேலும் தங்கத்தை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சீனா அதிகமான தங்கத்தை இறக்குமதி செய்தால் அது தங்கத்தின் விலையை உயர்த்தி விடும்.

இருப்பினும் டிசம்பர் மாதம் வரை தங்கம் விலை மேலும் சரியவே வாய்ப்புள்ளது. ஒருவேளை விலை உயர்ந்தாலும் அது பெரிய அளவில் இருக்காது.

இதையும் படியுங்கள்:
வரி விதிப்புக்கேற்ப எந்த தங்க முதலீடு சிறந்தது?
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்