​இனி தங்கம் வாங்கறது ரொம்ப ஈஸி! இன்றும் சரிந்த தங்கம் விலை! பெண்கள் தெரிஞ்சுக்க வேண்டிய குட் நியூஸ்!

தஙகம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold price
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 21) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.360 குறைந்து ரூ.91,720-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.175-க்கு விற்பனையாகிறது..

தங்கம் விலை கடந்த நவம்பர் 10-ம் தேதி முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த சரிவு டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை சரிவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் அதே வேளையில், வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களில் நகைக் கடன் வைத்திருப்பவர்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது தங்கத்தின் விலை சரிந்து இருப்பதால் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டிருக்கும் நகைகளின் மதிப்பும் குறைந்துள்ளது. இதன் காரணமாக நிலுவைத் தொகைக்கும் தங்கத்தின் மதிப்பிற்கும் இடையிலான வித்தியாசத்தை ஈடு செய்ய வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகையை செலுத்துமாறு நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 20) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.470 குறைந்து ரூ.11,510-க்கும், ஒரு சவரன் ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.175-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் இன்று (நவம்பர் 21) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.11,465-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.360 குறைந்து, ரூ.91,720-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி 1 கிராம் ரூ.175-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனையாகிறது.

Gold Price today
Gold Price
இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி பென்ஷன் போல மாதந்தோறும் PF பணம் பெறலாம்.!
தங்கம் விலை

அமெரிக்கா பெடரல் வங்கி வட்டி விகிதத்தை ஏற்கனவே 0.25 சதவீதம் உயர்தி நிலையில், மீண்டும் 0.25 முதல் 0.5 வரை உயர்த்தவுள்ளது.

இந்த வட்டி உயர்வு ஒரே நேரத்தில் அமலுக்கு வந்தாலும் வரும் அல்லது படிப்படியாக டிசம்பர் மாதத்தில் 0.25 மற்றும் ஜனவரி மாதத்தில் 0.25 சதவிதமும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வட்டி விகிதம் உயரும் பட்சத்தில், டாலர் மீதான முதலீடுகள் அதிகரித்து தங்கத்தின் விலை மேலும் 5% வரை குறைய வாய்ப்புள்ளது.

தஙகம் விலை மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்றும் குறைந்திருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்