தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி.! தங்கத்தின் 'ரோலர் கோஸ்டர்' ஆட்டத்தால் ஒரே நாளில் அதிரடி உயர்வு!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 23) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.1,080 குறைந்து ரூ.92,800-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.175-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலைக்கு நவம்பர் மாதம் தான் சிறப்பாக அமைந்துள்ளது. இதற்கு முந்தைய மாதங்களில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வந்தது. ஆனால் நவம்பர் மாதத்தில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.15,000-க்கும் மேல் குறைந்துள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கைகள் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் நிலையில், இந்தியன் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்தியதும் ஒரு காரணம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரைத்திருந்தார். இதனை கடந்த வார இறுதியில் நினைவு கூர்ந்த பிரதமர், நான் சொன்னதை மக்கள் கேட்டதால் தான் தற்போது தங்கம் விலை குறைந்திருக்கிறது எனக் கூறினார்.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 23) ஞாயிற்றுக்கிழமை என்பதால், தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.11,465-க்கும், ஒரு சவரன் ரூ.91,720-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.175-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 23) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.135 உயர்ந்து ரூ.11,600-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,080 உயர்ந்து, ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.175-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று உயர்ந்துள்ளது. இதன்மூலம் நீண்ட நாட்கள் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை
Gold Price
இதையும் படியுங்கள்:
சேமிப்புக் கணக்கில் பணம் இருக்கா? அப்போ இப்படி முதலீடு செய்யுங்க!
தங்கம் விலை

தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்து வரும் சூழலில், இன்னமும் கூட விலை குறையும் எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவின் பெடரல் வங்கி டாலரின் மதிப்பை உயர்த்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மீண்டும் வட்டியை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதனால் டிசம்பர் மாதம் வரை தங்கம் விலை சரியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்திய போது அதிபர் டிரம்ப் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, வட்டியைக் குறைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் வட்டி உயர்த்தப்பட்டால், அது சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பை உயர்த்தும்.

இதனால் டாலர் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். அதேசமயம் தங்க முதலீடுகள் குறைந்து, விலை குறைய அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
SIP திட்டத்தில் முதலீடு செய்ய இனி 10 ரூபாய் போதும்..! அமலுக்கு வந்தது புதிய திட்டம்..!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.