​மீண்டும் ஷாக்.! 2 நாட்களில் ரூ.2,000 உயர்வு! இனி தங்கம் வாங்கறது அவ்ளோ ஈஸி இல்ல!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold PriceAI Image
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 24) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.920 உயர்ந்து ரூ.92,720-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.175-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் 2 நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2,000 உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த 16 நாட்களாக சரிந்து வந்த நிலையில், நேற்று திடீரென உயர்வை சந்தித்தது. இந்நிலையில் இந்த விலை உயர்வு தொடருமா அல்லது மீண்டும் தங்கம் விலை சரியுமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் அமெரிக்காவின் மத்திய பெடரல் வங்கி வட்டி உயர்வை அமல்படுத்தும் எனத் தகவல்கள் வெளி வருவதால், தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி அமெரிக்காவில் மத்திய பெடரல் வங்கியின் நாணயக் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் தான் வட்டி விகிதம் குறித்த முக்கிய முடிவுகள் வெளியாகும். ஆகையால் டிசம்பர் 9-ம் தேதி தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது என்பது மட்டும் உறுதி.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 23) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.135 உயர்ந்து ரூ.11,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.175-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 24) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.115 உயர்ந்து ரூ.11,715-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.920 உயர்ந்து, ரூ.92,720-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி 1 கிராம் ரூ.175-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை
Gold Price
இதையும் படியுங்கள்:
சேமிப்புக் கணக்கில் பணம் இருக்கா? அப்போ இப்படி முதலீடு செய்யுங்க!
தங்கம் விலை

தங்கம் விலை உயர்ந்தாலும் சரி, குறைந்தாலும் சரி இப்போது வாங்கலாமா அல்லது இன்னும் கொஞ்ச நாட்கள் காத்திருக்கலாமா என்ற குழப்பம் அனைவருக்கும் உண்டு. இந்நிலையில் தங்கத்தை எப்போது வாங்கினால் பணத்தை சேமிக்க முடியும் எனக் காத்திருப்பவர்கள் நவம்பர் 25, டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 9 ஆகிய 3 தேதிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நாளை (நவம்பர் 25) அமெரிக்காவில் அக்டோபர் மாத ரீடைல் பணவீக்க தரவுகள் வெளியாக உள்ளன. இந்த தரவுகள் வட்டி விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால் தங்கம் விலையும் இதனை சார்ந்திருக்கிறது.

டிசம்பர் 4-ம் தேதி அமெரிக்காவின் நவம்பர் மாத வேலைவாய்ப்பு தரவுகள் வெளியாகின்றன. அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருந்தால் வட்டி உயர்ததப்பட அதிக வாய்ப்புள்ளது என்பதால், இந்தத் தேதியும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டிசம்பர் 9-ம் தேதி பெடரல் வங்கியின் நாணயக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வட்டி உயர்த்தப்பட்டால் தங்கம் விலை தடாலடியாக சரியும். ஒருவேளை வட்டி விகிதம் மாறறிமின்றி தொடர்ந்தால் தங்கம் விலை உயரும்.

இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும் போது இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க.! சைபர் கிரைம் எச்சரிக்கை.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.