வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும் போது இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க.! சைபர் கிரைம் எச்சரிக்கை.!

ஒரு சிறிய கவனக்குறைவு உங்கள் தனிப்பட்ட ரகசியங்களையும் பணத்தையும் பறித்துவிடும் அபாயம் உள்ளது.
வாட்ஸ்அப் வெப்
Whatsapp Web
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வரும் சூழலில், கணினியில் வாட்ஸ்அப் வெப் மூலமாக முக்கிய தகவல்களை பரிமாற வேண்டாம் வேண்டாம் என மத்திய அரசின் சைபர் குற்றத் தடுப்பு பிரிவு அதி முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது சைபர் பண மோசடி குற்றங்கள் அதிக அளவில் நடக்கும் சூழலில் காவல்துறையும், சைபர் தடுப்புப் பிரிவு துறையும் பொதுமக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது வாட்ஸ்அப் வழியாக சைபர் மோசடிகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெலிகிராம் வழியாக மோசடிகள் நடப்பதாக சைபர் கிரைம் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் வெப் சேவையைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்தியாவில் பலரும் மொபைல் போனிலேயே வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒருசிலர் வேலை சம்பந்தமாக கணினி அல்லது லேப்டாப்பில் வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்தி வருகின்றனர். ஒருசில கோப்புகளை அனுப்ப இவர்களுக்கு வாட்ஸ்அப் வெப் சௌகரியமாக இருக்கும்.

இந்நிலையில் முக்கியமான தகவல்களைப் பகிர்வதற்கு வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என மத்திய சைபர் குற்றத் தடுப்பு பிரிவு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி அலுவலக தகவல்கள் மற்றும் தனிப்பட்ட ரகசியத்தைப் பகிர வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்தி முடித்த பிறகு, கணினியில் கண்டிப்பாக லாக் அவுட் செய்ய வேண்டும். இல்லையெனில் மோசடி கும்பல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பண மோசடி மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.

கணினியில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும் போது, Incognito முறையைப் பயன்படுத்துவது மோசடிகளில் இருந்து தப்பிக்க உதவும்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் நமக்கு எந்த அளவிற்கு நன்மைகள் கிடைக்கிறதோ, கவனமாக இல்லையெனில் பாதிப்புகளும் அதே அளவிற்கு இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

Whatsapp Web - Cyber crime Activity
Whatsapp Web
இதையும் படியுங்கள்:
ஐயப்ப பக்தர்களே உஷார்! ஒரு சின்ன தவறு செய்தால் ரூ.5,000 அபராதம்; மீண்டும் புக்கிங் செய்யவே முடியாது!
வாட்ஸ்அப் வெப்

வாட்ஸ்அப் வெப் வழியாக ஹேக்கர்கள் உங்கள் தகவல்களை எளிதாக எடுத்து விடுவார்கள். மேலும் உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கைக் கைப்பற்றவும், நிர்வகிக்கவும் மற்றும் உரையாடல்களைப் படிக்கவும் அவர்களால் முடியும் என்பதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

உங்களின் வாட்ஸ்அப் கணக்கில் இருக்கும் தொடர்புகளை எடுத்து, ஆள்மாறாட்ட மோசடியும் நடக்க அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக முக்கியமான ஓடிபி மற்றும் பாஸ்வேர்டு உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் வெப்பில் பகிர்ந்தால், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பண மோசடி நடக்கவும் வாய்ப்புள்ளது.

அலுவலக கணினிகள், பொதுக் கணினிகள் மற்றும் பிறரால் எளிதில் அணுகக் கூடிய சாதனங்களில் வாட்ஸ்அப் வெப்பைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பணம், ரகசிய தகவல்களை வாட்ஸ்அப் வெப் வழியாக பரிமாறிக் கொள்வதை முழுவதுமாக தவிர்ப்பது நல்லது என்றும், பொது இடங்களில் இருக்கும் கணினிகளில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த வேண்டாம் என்றும் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்

இதையும் படியுங்கள்:
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி.! தங்கத்தின் 'ரோலர் கோஸ்டர்' ஆட்டத்தால் ஒரே நாளில் அதிரடி உயர்வு!
வாட்ஸ்அப் வெப்