ரூ.2,360 சரிந்த தங்கம்.! ரூ.10,000 சரிந்த வெள்ளி.! இனி பட்ஜெட் விலையிலேயே தங்கம் வாங்கலாம்.!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price Today
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 25) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.2,360 உயர்ந்து ரூ.91,360-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை 1 கிராம் ரூ.10 குறைந்உ ரூ.165-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை அதிரடியான சரிவில் இருந்து, கடந்த 2 நாட்களாக மீண்டும் உயர்ந்து வருகிறது. இதன்படி இந்த வாரத்தின் முதல் நாள் ரூ.1,080 மற்றும் நேற்று ரூ.920 என 2 நாட்களில் ஒரு சவரன் விலை ரூ.2,000 வரை உயர்ந்தது.

தங்கத்தின் விலை மேலும் குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டு வரும் நிலையில், தங்கத்தின் இந்த விலை உயர்வு தொடருமா அல்லது மீண்டும் சரிவுப் பாதைக்கு செல்லுமா என்ற கேள்வி சாமானிய மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் தங்கத்தை இப்போது வாங்கலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற குழப்பமும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் முடிவு தெரியும் விதமாக டிசம்பர் 9 வரை பொதுமக்கள் காத்திருக்கலாம் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் மத்திய ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் டிசம்பர் 9-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் அன்றைய தினமே தங்கம் விலை தாறுமாறாக சரிய வாய்ப்புள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 24) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.115 உயர்ந்து ரூ.11,715-க்கும், ஒரு சவரன் ரூ.920 உயர்ந்து ரூ.93,720-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.175-க்கு விற்பனையானது

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 25) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,360 குறைந்து, ரூ.91,360-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.10 குறைந்து, ரூ.165-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.1,65,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை
Gold Price
இதையும் படியுங்கள்:
காகிதமில்லா பத்திரப்பதிவு: ஸ்டார் 3.0 திட்டத்தால் பொதுமக்கள் சந்திக்கும் முக்கிய சிக்கல்கள்.!!
தங்கம் விலை

டாலரை பலப்படுத்த அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் மாற்றமில்லாமல் தொடரும் அல்லது அதிகரிக்கப்படுமே தவிர வட்டியைக் குறைக்க எவ்வித வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் வெளி வருகின்றன.

வட்டி விகிதம் மாற்றமில்லாமல் தொடர்ந்தால் தங்கத்தின் விலை சற்றளவு உயர வாய்ப்புள்ளது. அதேசமயம் வட்டி விகிதம் 0.25% முதல் 0.5% வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது மட்டும் நடந்தால் டாலர் மீதான முதலீடுகள் அதிகரித்து தங்கத்தின் மீதான முதலீடுகள் குறையும். தங்க முதலீடுகள் குறையும்போது உலக சந்தையில் தங்கத்தின் விலையும் சரியும்.

இது ஒரு புறம் இருக்க சீனா தங்கத்தை அதிக அளவில் வாங்கிக் குவித்து வருகிறது. தங்கம் விலை குறைந்த பிறகு அது மீண்டும் உயர்வதற்கு சீனாவின் தங்க இறக்குமதியும் ஒரு முக்கிய காரணமாக அமையலாம்.

கடந்த முறை அமெரிக்க வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட போது அதனை குறைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், இதற்கு டிரம்ப் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.