

தொழில்நுட்ப வளர்ச்சி எல்லாம் தமிழக அரசின் அனைத்து சேவைகளும் தற்போது ஆன்லைனில் கிடைக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கான சான்றிதழ்கள் தொடங்கி பத்திரப்பதிவு வரை ஆன்லைன் மையம் வந்துவிட்டது. குறிப்பாக பத்திரப் பதிவுத் துறையில் ஆன்லைன் சமர்ப்பிப்பு கொண்டு வரப்பட்டது,
பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தே பத்திரப் பதிவிற்கு ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முடியும். கடந்த நவம்பர் 2-ம் தேதி ஸ்டார் 3.0 என்ற திட்டத்தின் மூலம் காகிதமில்லா பத்திரப் பதிவு முறை கொண்டு வரப்பட்டது. இது பத்திரப் பதிவை எளிமையாக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இதன்படி ஆன்லைனில் ஆவணங்கள் சரியாக பதிவேற்றம் ஆகவில்லை என்றும், பத்திரப் பதிவின் போது பிழைகளை கண்டறிவதில் சிரமம் இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது
2026 நவம்பர் 2-ம் தேதி அறிமுகமான ஸ்டார் 3.0 மூலம், இடைத்தரகர்கள் உதவியின்றி வீட்டில் இருந்து கொண்டே பத்திரப் பதிவை செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும் இது தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் குறைவாக இருப்பதால், இன்னமும் பத்திர எழுத்தர்கள் மற்றும் கணினி இயக்குநர்களையே மக்கள் அதிகம் நம்பியுள்ளனர்.
ஸ்டார் 3.0 தெழில்நுட்பம் கணினி அறிவு படைத்தவர்களுக்கே நன்றாக தெரிய வாய்ப்புள்ளது. இதனால் சாமானிய மக்கள் இ-சேவை மையங்களை நாட வேண்டிய அவசியமே இன்னமும் உள்ளது.
முன்பெல்லாம் பத்திரப் பதிவு விவரங்களை ஆஃப்லைனில் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யப்பட்டு பிரிண்ட் எடுத்து விண்ணப்பதாரரிடம் வழங்கப்படும். இதனால் பத்திரப் பதிவில் உள்ள பிழைகளை எளிதாக கண்டறிய முடிந்தது. பிழைகள் திருத்தப்பட்ட பின்னரே ஆன்லைனில் பதிவேற்றம் செய்வர்.
ஆனால் தற்போது ஆவணங்கள் நேரடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுவதால், பிழைகைளை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆன்லைனிலேயே சரிபார்க்க வேண்டிய சூழலில், பிழை இருந்தால் மீண்டும் பணத்தை செலவு செய்து பத்திரப் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும் விண்ணப்பதாரர் தரப்பில் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட போதிலும், சார்பதிவாளருக்கு ஆவணங்கள் சரியாக காண்பிக்கப்படுவதில்லை. இதனால் பத்திரப் பதிவு நிராகரிக்கப்படுகிறது
ஆன்லைன் பத்தரப் பதிவுகள் நிராகரிக்கப்படாமல் இருக்க, ஆன்லைனில் பதிவேற்றம் செய்த பிறகு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யும் வசதியை அரசு கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பல இன்னல்களை தாண்டி பத்திரப் பதிவுக்கு விண்ணப்பித்தால், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் ஒப்பதல் அளிக்க கால தாமதமாகிறது. இந்நிலையில் பத்திரப் பதிவில் உள்ள குளறுபடிகளை நீக்கவும், விரைவான ஒப்பதலைப் பெறவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் எனத் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், பத்திரப் பதிவை கால தாமதமின்றி விரைவுபடுத்தவும் தான் ஸ்டார் 3.0 கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் உள்ள குளறுபடிகள், பொதுமக்களுக்கு கூடுதல் சிரம்த்தையை கொடுக்கிறது. ஆகையால் இதில் உள்ள குறைபாடுகளைக் கலைந்து, தமிழக அரசு மீண்டும் பத்திரப் பதிவை எளிமைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.