

இன்று (நவம்பர் 26) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.960 உயர்ந்து ரூ.92,320-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.165-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தது. ஆனால் நேற்று 2 நாட்கள் உயர்வையும் சரிகட்டும் வகையில் தங்கம் விலை குறைந்தது. பொருளாதார நிபுணர்களின் கணிப்பு படி, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.78,000 வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு புறம் தங்கம் விலை குறைந்து விட்டதே என பலரும் மகிழ்ச்சியாக இருந்தாலும், தங்க நகைகளை இப்போதே வாங்கலாமா அலல்து இன்னும் விலை குறைந்த பின் வாங்கலாமா என்ற குழப்பம் நீடிக்கிறது. இதனால் பலரும் தினசரி தங்கம் விலையை மட்டும் பார்த்து மகிழ்கின்றனர்.
அடுத்த 15 நாட்களுக்குள் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.10,000-க்கும் மேல் குறைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது உறுதியாகி இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 9-ம் தேதியன்று தான் வெளியாகும். வட்டி உயர்வுக்குப் பின் டாலர் முதலீடுகள் அதிகரித்தால், தங்கம் விலை தடாலடியாக சரிந்து விடும்.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (நவம்பர் 25) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கும், ஒரு சவரன் ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.10 குறைந்து ரூ.165-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 26) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.11,540-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.960 உயர்ந்து, ரூ.92,320-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி 1 கிராம் ரூ.165-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.1,65,000-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை சரிவைத் தொடர்ந்து வெளிநாடுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 60.1 டன் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.
இன்று சர்வதேச சநதையில் ஒரு அவுன்ஸ் (24 கிராம்) தங்கம் 14 டாலர்கள் உயர்ந்து, $3,574-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு அவுன்ஸ் 41 டாலருக்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, இந்திய சந்தையிலும் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்