சூப்பர் குட் நியூஸ்.! 1.98 லட்சம் பேருக்கு வேலை.! வெற்றி முதலீடு மாநாட்டில் அசத்திய முதல்வர் விஜய்.!

தமிழக அரசு சார்பில் இன்று (நவம்பர் 25) 2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது.
வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு
Vetri Investment Conference
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழக அரசு சார்பில் இன்று (நவம்பர் 25) 2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் முதல்வர் விஜய் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் அமைச்சர் கீர்த்தனா தமிழ்நாடு மேப்பில் 1.5 டிரில்லியன் டாலர் முதலீடு எனப் பொறிக்கப்பட்ட நினைவுப் பரிசை முதல்வர் விஜய்க்கு வழங்கினார்.

மாநாட்டின் சிறப்பம்சங்கள்:

* முதல்வர் முன்னிலையில் தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் ரூ.58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

* ரூ.7,925 கோடி முதலீட்டில் 19,965 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 15 புதிய திட்டங்களுக்கு முதல்வர் விஜய் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

* ரூ.1,430 கோடி முதலீட்டில் 1,710 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 6 புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டன.

* முதலீட்டு மாநாட்டின் மூலம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் மற்றும் விருதநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசிப்பவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

* UPS, Omron, stylcove, Mahindra மற்றும் Autoliv உள்ளிட்ட 5 தனியார் நிறுவனங்களில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 18 பேருக்கு முதல்வர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வெற்றி முதலீட்டு மாநாடு
Vetri Investment
இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி பென்ஷன் போல மாதந்தோறும் PF பணம் பெறலாம்.!
வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு

முக்கிய முதலீடுகள்:

1. JM Baxi Ports & Logistics - ரூ.5,200 கோடி - 7,500 வேலைவாய்ப்புகள்

2. CSE Development India - ரூ.8,140 கோடி - 2,000 வேலைவாய்ப்புகள்

3. Avigna - ரூ.5,000 கோடி

4. TVS Motor Company - ரூ.2,000 கோடி

5. WEG Industries - ரூ.2,000 கோடி

6. Sanmar Group - ரூ.1,950 கோடி

7. Titan Company - ரூ.1,500 கோடி

இதுதவிர Titan நிறுவனத்தின் மூலம் மின்னணுவியல் துறையில் 3,000 பேருக்கும், SCM Garments நிறுவனத்தின் மூலம் ஜவுளித் துறையில் 5,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

இதையும் படியுங்கள்:
ரூ.2,360 சரிந்த தங்கம்.! ரூ.10,000 சரிந்த வெள்ளி.! இனி பட்ஜெட் விலையிலேயே தங்கம் வாங்கலாம்.!
வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு

முதல்வர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் இரண்டாவது வெற்றி முதலீட்டு மாநாடு இதுவாகும். இந்த 2 மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலமாக, தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் 200 நாட்களிலேயே ரூ.1.73 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

2 மாநாடுகளையும் சேர்த்து 190 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் வாயிலாக, 1,98,557 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தலைநகர் சென்னையில் முதல் வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ.67,452 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1,06,998 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.

ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் 100 நாட்களிலேயே ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்து தமிழக அரசு. இன்று நடந்த 2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.58,214 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 1,98,557 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.