

இன்று (நவம்பர் 27) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.480 உயர்ந்து ரூ.92,800-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.170-க்கு விற்பனையாகிறது.
தஙகம் விலை அதன் உச்சபட்ச விலையில் இருந்து ஒரு சவரனுக்கு ரூ.35,000-க்கும் மேல் குறைந்துளள்து. இந்த விலை சரிவால் இல்லதத்ரசிகளும், சாமானிய மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நகைக் கடன் வாங்கியவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுளள்து.
தங்கத்தின் விலை சரிவால் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பும் குறைந்துள்ளது. இதனால் கடன் தொகையை விடவும் தங்கத்தின் மதிப்பு குறைவாக இருப்பதால், கூடுதல் தொகையை செலுத்துமாறு வாடிக்கையாளருக்கு வங்கிகள் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பணம் இல்லாதவர்கள் கூடுதல் நகைகளை வங்கியில் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க வேண்டுமெனில் நகைக் கடனை விரைவாக மீட்டு விட வேண்டியது அவசியம்.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்: நேற்று (நவம்பர் 26) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.120 உயர்ந்து ரூ.11,540-க்கும், ஒரு சவரன் ரூ.2,360 உயர்ந்து ரூ.92,320-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.165-க்கு விற்பனையானது
சர்வதேச சந்தையில் தஙகம், வெள்ளி விலை நிலவரம்:
சர்வதேச சந்தையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்றும் (நவம்பர் 27) ஒரு அவுன்ஸ் தங்கம் 30 டாலர் உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 3,567 டாலருக்கும், ஒரு அவுன்ஸ் வெள்ளி மாற்றமின்றி 41 டாலருக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததையடுத்து, இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 27) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.11,600-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து, ரூ.92,800-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 அதிகரித்து, ரூ.170-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.1,70,000-க்கு விற்பனையாகிறது.
கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் மட்டும் வெளிநாடுகளில் இந்தியா 60.1 டன் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருந்தது. இந்நிலையில் தங்கம் விலை சரிவால் இந்த தங்கத்தை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது ரிசர்வ் வங்கி.
இதன் மூலம் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவு 740.1 டன்னாக உயர்ந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியிடம் தற்போது 780.1 டன் தங்கம் உள்ள நிலையில், அதில் 84% இந்தியாவிலும், 16% தங்கம் இங்கிலாந்து மற்றும் BIS-யில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.