வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்: 50% மானியத்தில் மாடித் தோட்டம் அமைக்க விண்ணப்பிப்பது எப்படி?

விதைகள், உரங்கள் மற்றும் க்ரோ பேக்குகள் அடங்கிய முழுத் தொகுப்பைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
மாடித் தோட்டம் - 50% மானியம்
Terrace Garden
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதே சமயம் மாடித் தோட்டங்களை அதிகரிக்கவும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை சார்பில் மாடித் தோட்டம் கிட் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மாடித் தோட்டம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்தது.

பொதுவாக கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் தோட்டம் இருக்கும். இந்தத் தோட்டத்தில் பூச்செடிகள், குறுகிய கால பயிர்கள் விளைவிக்கப்படும். ஆனால் நகரங்களில் வசிக்கும் மக்களால் தோட்டம் அமைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கொண்டு வரப்பட்டது தான் மாடித் தோட்டம். மொட்டை மாடியில் காலியாக இருக்கும் இடத்தைக் கூட தோட்டமாக மாற்றிட முடியும் என்பதற்கு சாட்சியாய் மாடித் தோட்டம் விளங்கியது.

இருப்பினும் தொடக்க காலத்தில் மாடித் தோட்டத்திற்கு என்னென்ன தேவை, விதைகளை எங்கு வாங்குவது, உரங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற சந்தேகங்கள் எழுந்தன. பொதுமக்களுக்கு எழுந்த அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்க தோட்டக்கலைத் துறை களத்தில் இறங்கியது.

இதன்படி மாடித் தோட்டம் அமைக்க விரும்பும் மக்களுக்கு அரசு மானியத்தில் மாடித் தோட்ட கிட் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் விதைகள், உரங்கள், க்ரோ பேக்ஸ் உள்ளிட்ட மாடித் தோட்டம் அமைக்கத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருக்கும். இந்நிலையில் நடப்பாண்டும் மாடித் தோட்ட கிட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டத் தளைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. கிராமம் மட்டுமின்றி நகரங்களில் வசிக்கும் மக்களும் தங்கள் வீடுகளில் மாடித்தோட்டம் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், மாடித் தோட்டத் தொகுப்புகள் 50% அரசு மானியத்தில் வழங்கப்படுகின்றன.

மாடித்தோட்டத் தொகுப்பில் உள்ள இடுபொருட்கள்:

* செடி வளர்ப்புப் பைகள்

* தென்னை நார் கழிவுக் கட்டிகள்

* காய்கறி விதைகள்

* அசோஸ்பைரில்லம்

* பாஸ்போபாக்டீரியா

* டிரைக்கோடெர்மா விரிடி

* வேப்ப எண்ணெய்

* மண்புழு உரம்

* வழிமுறை கையேடு

* பஞ்சகவ்யம், தசகவ்யம் மற்றும் மீன் அமிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.

மானிய விவரங்கள்:

* மானிய சதவிகிதம்: 50%

* மாடித் தோட்ட தொகுப்பின் மொத்த விலை: ரூ.1,450/-

* அரசு மானியம்: ரூ.725/- *

பயனாளியின் பங்குத் தொகை: ரூ.725/-

Terrace garden
Terrace garden
இதையும் படியுங்கள்:
விவசாயம் செய்ய இடம் இல்லையா? செங்குத்து தோட்டம் அமைக்கலாம் வாங்க!
மாடித் தோட்டம் - 50% மானியம்

விண்ணப்பிக்கும் முறை:

* தோட்டக்கலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://tnhorticulture.tn.gov.in/kit/) செல்லவும்.

* முகப்புப் பக்கத்தில் உள்ள வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் என்பதை கிளிக் செய்யவும்.

* Terrace Garden Kit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* ஆதார் எண், மொபைல் எண் மற்றும் வீட்டு முகவரியை பதிவு செய்ய வேண்டும்.

* அடுத்ததாக பயனாளியின் பங்குத் தொகையை ஆன்லைனில் செலுத்தி உங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

* ஆன்லைனில் பதிவு செய்த பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும். குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தோட்டக்கலை அலுவலர்களைத் தொடர்பு கொண்டால், உங்களுக்கென ஒரு தேதி மற்றும் நேரம் ஒதுக்கப்படும்.

* அலுவலர்கள் குறிப்பிடும் தேதியில் மாடித்தோட்ட தோட்டக்கலைத் தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம்.

குறிப்பு: ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 2 மாடித் தோட்ட தொகுப்புகள் மட்டுமே வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
மாடித் தோட்டம் அமைக்கலாம் வாங்க!
மாடித் தோட்டம் - 50% மானியம்