குட் நியூஸ்..! ரூ.80,000-ஐ நோக்கிச் செல்லும் தங்கம் விலை.! திடீரென சரிந்தது விலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 28) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.93,760-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.170-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நேற்று காலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.1,360 உயர்ந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 2 முறை தங்கம் உயர்ந்தது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், நேற்றைய உயர்வு பலருக்கும் அதிர்ச்சி தான். சர்வதேச சந்தையில் நேற்று தங்கம் விலை உயர்ந்ததே இதற்கு காரணம். டிசம்பர் இரண்டாவது வாரம் வரை தங்கம் விலையில் சரிவு இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போதைய விலை உயர்வு தற்காலிகமானது தான். மீண்டும் தங்கம் விலை சரியத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 27) தங்கம் விலை ஒரு கிராம் ரூ.230 உயர்ந்து ரூ.11,770-க்கும், ஒரு சவரன் ரூ.1,840 உயர்ந்து ரூ.94,160-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.170-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 28) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50 குறைந்து ரூ.11,720-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து, ரூ.93,760-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி 1 கிராம் ரூ.170-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.1,70,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை நேற்று இருமுறை உயர்ந்த நிலையில் இன்று சரிந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

தங்கம் விலை - Gold Price
தங்கம் விலை - Gold Price
இதையும் படியுங்கள்:
SIP திட்டத்தில் முதலீடு செய்ய இனி 10 ரூபாய் போதும்..! அமலுக்கு வந்தது புதிய திட்டம்..!
தங்கம் விலை

தங்கம் விலை சரிவால், தங்க நகைக் கடன் வாங்கியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் நேற்று உயர்வைச் சந்தித்தது கடன் வாங்கியோருக்கு சற்று ஆறுதலைக் கொடுத்துள்ளது.

முன்னதாக தங்க நகைக் கடனுக்கு கூட்டுறவு வங்கியில் ஒரு கிராமுக்கு ரூ.10,000 வரை கடன் தரலாம் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் தங்கம் விலை சரிவைத் தொடர்ந்து இந்தக் கடன் வரம்பு ரூ.9,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை நவம்பர் மாதத்தில் தான் வெகுவாக சரிந்துள்ளது. இந்த சரிவு டிசம்பர் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவில் அவ்வப்பபோது விலை உயரவும் வாய்ப்புள்ளது. நேற்று இருமுறை தங்கம் விலை உயர்ந்தது போலவே, இனிவரும் நாட்களிலும் விலை உயரலாம். இருப்பினும் விலை சரிவு தான் அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இன்று விலை சரிந்திருக்கும் சூழலில் விரைவில் ஒரு சவரன் தங்கம் ரூ.80,000-க்கு கீழே செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.