

இன்று (நவம்பர் 3) 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கு விற்பனையாகிறது. 2 நாட்களில் மட்டும் ரூ.560 உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.200-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் பெரும் சரிவைக் கண்டது. இந்த சரிவு தொடரும் என எதிர்பார்த்த வேளையில், நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தங்கத்தின் விலை மேலும் சரியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சவரன் தங்கம் விலை உச்சபட்ச விலையாக ரூ.1.32 லட்சத்துக்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.30,000-க்கும் மேல் தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த சரிவு முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், சாமானிய மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு தங்கம் விலை மேலும் குறைந்தால், அது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஜாக்பாட்டாக அமையும்.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
மாதத்தின் முதல் நாளான நேற்று (நவம்பர் 2) 1 கிராம் தங்கம் ரூ.45 அதிகரித்து ரூ.12,770-க்கும், ஒரு சவரன் ரூ.360 அதிகரித்து ரூ.1,02,200-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.200-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 3) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.1,02,400-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.200-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,00,000-க்கும் விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்றும் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், தீபாவளிக்கும் விலையில் ஒரு பெரும் சரிவு ஏற்பட்டால் இந்திய சந்தையில் தங்க விற்பனை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் குறையும் என்ற கணிப்புகள் வெளியாகி இருப்பதால், இதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
தங்கம் விலை ஒரு சவரன் ரூ.78,000 ஆக சரியும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இது மட்டும் நடந்தால், இல்லத்தரசிகளுக்கு அதைவிட வேறென்ன வேண்டும்.
இன்று (நவம்பர் 3) அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில், இதன் வெற்றி நிலவரங்கள் சர்வதேச தங்க சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்து வரும் சூழலில், அமெரிக்க இடைத்தேர்தல் முக்கியத்தும் பெற்றுள்ளது. அடுத்த சில நாட்களில் இதன் தாக்கம் என்னவென்று தெரிந்து விடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.