அதிர்ச்சி.!! இன்னைக்கும் ஏறிடுச்சு! நிற்காமல் ஓடும் தங்க ரதம்.. சாமானிய மக்கள் தலையில் இடி!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 4) 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,600-க்கு விற்பனையாகிறது. 3 நாட்களில் மட்டும் ரூ.760 உயர்ந்துள்ளது. இன்றும் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.200-க்கு விற்பனையாகிறது.

தீபாவளிக்கு தங்கம் விலை சரியும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த வாரத்தில் இருந்த சரிவு, இந்த வாரத் தொடக்கத்தில் இல்லை. நவம்பர் 2-ம் தேதி ரூ.360, நவம்பர் 3-ம் தேதி ரூ.200 என 2 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.560 வரை உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்திலும் முதல் 3 நாட்கள் சிறுசிறு உயர்வைக் கண்ட பிறகு தான், வார இறுதியில் மொத்தமாக சரிந்தது. அதேபோல் இந்த வாரமும் வார இறுதியில் விலை சரியுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேற்று அமெரிக்காவில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், தங்கம் விலை சரிய வாய்ப்புள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

மாதத்தின் முதல் நாளான நேற்று (நவம்பர் 3) 1 கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்து ரூ.12,800-க்கும், ஒரு சவரன் ரூ.200 அதிகரித்து ரூ.1,02,400-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் நேற்றும் மாற்றமின்றி ரூ.200-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 4) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.12,825-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.1,02,600-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.200-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,00,000-க்கும் விற்பனையாகிறது. தொடண்ந்து 3வது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Gold
Gold
இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.!! தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை - நவ. 7 வரை தான் டைம்.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
தங்கம் விலை

கடந்த வார இறுதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிந்தது, தீபாவளிக்கு ஜாக்பாட்டாக அமைந்தது எனவும், மேலும் விலை குறைந்து சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழே வரும் எனவும் வல்லுநர்கள் கூறினர். ஆனால் வெள்ளி விலை மாற்றமின்றி தொடரும் சூழலில், தங்கம் விலை மெல்ல மெல்ல உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது தான்.

தங்கத்தின் விலை விரைவிலேயே இமாலய சரிவை சந்திக்கப் போவதாக கணிப்புகள் கூறுகின்றன. இதற்கு அமெரிக்க தேர்தலும், டாலரின் மீதான முதலீடுகளும் முக்கிய காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிந்தால், இந்திய சந்தையில் ஒரு சவரன் தங்கம் மட்டுமல்ல 10 கிராம் தங்கம் கூட ரூ.1 லட்சத்துக்கு கீழே வர வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி அரசு வேலை கனவு நனவாகும்! வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: குரூப் 1, 2, 4 புதிய வயது பட்டியல் இதோ!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.