குட் நியூஸ்.! ஆவின் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ்.!

ஆவின் ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! தீபாவளிக்கு அரசு கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு!
தீபாவளி போனஸ்
Aavin
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் நேற்று டாஸ்மாக் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் இன்று (நவம்பர் 4) ஆவின் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 60%-இல் இருந்து 63% ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தற்போது ஆவினில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 29 மாவட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் 3,002 ஆவின் பணியாளர்களுக்கு 8.33% மிகை ஊதியம் மற்றும் 11.67% கருணைத் தொகை உள்பட மொத்தம் 20% தீபாவளி போனஸ் வழங்கப்படுகிறது.

ஆவின் பணியாளர்கள் தீபாவளி பண்டிகையை நிதிச் சுமையின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசு போனஸை அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தீபாவளி பலகாரத்தில் கலப்படமா? ஈஸியா கண்டுபிடிக்க 4 வழிகள்.. வாட்ஸ்அப் புகார் செய்வது எப்படி?
தீபாவளி போனஸ்

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு 2026 தீபாவளி பண்டிகைக்கு 20% போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆவின் பணியாளர்களுக்கும் 20% போனஸ் வழங்கப்பட்டிருப்பது பணியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நிதி மற்றும் பயனாளிகள் விவரம்:

* மாநில இணையப் பணியாளர்கள் 1,106 பேருக்கு தீபாவளி போனஸ் வழங்க ரூ.1.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மாவட்ட ஒன்றியப் பணியாளர்கள் 1,896 பேருக்கு தீபாவளி போனஸ் வழங்க ரூ. 2.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஒட்டுமொத்தமாக ஆவின் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசால் ரூ.4.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், 16 ஆவின் பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கி, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமதி. சி.விஜயலட்சுமி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இதையும் படியுங்கள்:
அதிர்ச்சி.!! இன்னைக்கும் ஏறிடுச்சு! நிற்காமல் ஓடும் தங்க ரதம்.. சாமானிய மக்கள் தலையில் இடி!
தீபாவளி போனஸ்
தீபாவளி போனஸ்
Aavin

எவ்வளவு கிடைக்கும்?

ஆவினில் பணிபுரியும் தகுதியுள்ள நிரந்தர பணியாளர்களுக்கு குறைந்தபட்ச போனஸாக ரூ.8,400 கிடைக்கும்; அதிகபட்ச போனஸாக ரூ.16,800 கிடைக்கும். இதற்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே, இம்முறையும் முறைப்படுத்தப்பட்ட PSU ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் போனஸ் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கான மொத்த செலவீனம் ரூ.4.49 கோடி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் உள்ள நிதியிலிருந்து செலவிடப்படும்.

சமீபத்தில் ஆவினில் தயாரிக்கப்படும் 60-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று முன்தினம் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்படுவதாக வதந்தி பரவியது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பால் விலை உயர்வு இல்லை என நேற்று ஆவின் நிறுவனம் விளக்கமளித்தது.

பால் விலை உயர்வு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட அடுத்த நாளே, ஆவின் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் அறிவிப்பால் பணியாளர்களுக்கு தீபாவளியில் நிதி நெருக்கடி சூழல் தவிர்க்கப்படும்.