

இன்று (நவம்பர் 6) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ரூ.1,07,080-க்கு விற்பனையாகிறது. 4 நாட்களில் மட்டும் ரூ.5,240 உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.210-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் தாக்கம், தங்கத்தின் விலையில் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.4,680 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை ரூ.3,500-க்கும் குறைந்தது. ஆனால் இந்த வாரம் உயர்ந்து விட்டது. விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழே வந்து விடும் என்ற நம்பிக்கை பிறக்கும் போதெல்லாம், தங்கம் விலை திடீர் உயர்வை சந்திப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (நவம்பர் 5) 1 கிராம் தங்கம் ரூ.285 அதிகரித்து ரூ.13,385-க்கும், ஒரு சவரன் ரூ.2,280 அதிகரித்து ரூ.1,07,080-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.210-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 6) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,385-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,07,080-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.210-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,10,000-க்கும் விற்பனையாகிறது.
நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று விலை மாற்றமின்றி விற்பனையாவது இல்லத்தரசிகளுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது.
கடந்த வாரம் தங்கத்தின் விலை குறையும் போது ஒரு சவரன் தங்கம் ரூ.78,000 ஆக குறையும்; 10 கிராம் தங்கம் ரூ.1 லட்சத்துக்குள் வந்து விடும் என கணிப்புகள் வெளியாகின. ஆனால் இந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி விட்டது இந்த வார விலை உயர்வு.
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளதால், நகைக்கடை வியாபாரிகள் கூட தங்கம் கொள்முதலை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த திடீர் விலை உயர்வு பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே மீதமுள்ள நிலையில், பண்டிகை நேரத்திலாவது விலை குறையுமா என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இருப்பினும் உலகளாவிய சந்தை நிலவரங்களைப் பொறுத்தே விலை குறையுமா அல்லது உயருமா என்பது தெரிய வரும். இப்போதைக்கு விலை குறையும் என்ற நம்பிக்கை இல்லையென்றே வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது அடுத்த ஆண்டில் நல்ல லாபத்தைக் கொடுக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.