செம ஷாக்..!! ஒரே நாளில் ரூ.45,000 உயர்வு.! தங்கத்தை விடுங்க... வெள்ளியின் ருத்ரதாண்டவம் ஸ்டார்ட்..!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
Gold and Silver Rates
Gold and Silver
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 7) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.160 குறைந்து ரூ.1,07,240-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.250-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை இந்த அளவிற்கு உயர்வை சந்தித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை இந்த வாரத்தில் முதல் 4 நாட்களில் மட்டும் ரூ.5,240 வரை உயர்ந்துள்ளது. ஆனால் நேற்று காலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே சவரனுக்கு ரூ.1,960 குறைந்து இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.5 குறைந்தது. அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலால் விலை உயர்ந்த தங்கம் விலை, திடீர் சரிவை சந்தித்தது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

இந்நிலையில் வார இறுதியிலும் தங்கம் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 6) 1 கிராம் தங்கம் ரூ.245 குறைந்து ரூ.13,140-க்கும், ஒரு சவரன் ரூ.1,960 குறைந்து ரூ.1,05,120-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து ரூ.205-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 7) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து ரூ.13,160-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து, ரூ.1,07,240-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.45 அதிகரித்து, ரூ.250-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.45,000 அதிகரித்து ரூ.2,50,000-க்கு விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.45,000 உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gold Price
Gold Price
இதையும் படியுங்கள்:
ஜீவன் பிரமாண் செயலியில் போட்டோ ரிஜெக்ட் ஆகுதா? – நிமிடத்தில் சரி செய்ய இதோ எளிய ட்ரிக்ஸ்!
Gold and Silver Rates

தங்கம் விலை திடீரென சரிவதும், திடீரென உயர்வதும் தற்போது வாடிக்கையாகி விட்டது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே சரியும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சாமானிய மக்களுக்கு அந்த நல்ல செய்தி எப்போது வரும் என்றே தெரியவில்லை.

கடந்த வாரம் விலை சரிந்த போது, இந்த வாரத்தில் ரூ.1 லட்சத்துக்குள் வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாரத் தொடக்கத்தில் இருந்தே உயர்வை சந்தித்த தங்கம் விலை, ரூ.5,000 மேல் உயர்ந்தது. ஆனால் நேற்று மீண்டும் தங்கம் விலை குறைந்திருப்பது, மேலும் சரியுமா என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஆனால் பங்குச்சந்தை நிலவரங்கள், டாலரின் மதிப்பு மற்றும் சர்வதேச பொருளாதாரச் சூழலைப் பொறுத்தே இது நடக்கும். இருப்பினும் பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு படி, தற்போது விலை குறைந்தாலும் இந்த ஆண்டு இறுதியில் விலை உயரும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம்! வெற்றி வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Gold and Silver Rates
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.