வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம்! வெற்றி வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு: யாருக்கெல்லாம் கிடைக்கும்?

சொந்தமாக கான்கிரீட் வீடு கட்ட ரூ.5 லட்சம் அரசு உதவி; முதல் கட்டமாக 70,000 வீடுகளுக்கு ஒப்புதல்.
வெற்றி வீடு திட்டம்
Vetri Veedu Scheme
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கலின் போது இதுகுறித்த அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 6) ‘வெற்றி வீடு திட்டத்தின்’ கீழ் முதற்கட்டமாக 70,000 வீடுகள் கட்ட ரூ.3,521 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒரு வீடு கட்ட ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி வீடு திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் எண்ணற்ற மக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் குடிசைகள் மற்றும் பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகளை அமைத்துக் கொடுக்க தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது தான் வெற்றி வீடு திட்டம்.

இதையும் படியுங்கள்:
ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு! நாளை ரேஷன் கடைகள் இயங்குமா?தமிழக அரசு திடீர் அறிவிப்பு.!
வெற்றி வீடு திட்டம்

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:

* ஒரு வீட்டிற்கான தமிழக அரசின் மானியம்: ரூ. 5 லட்சம்

* முதற்கட்ட இலக்கு: 2026 - 2027 நிதியாண்டுக்குள் 70,000 வீடுகள் கட்ட ஒப்புதல்

* நிதி ஒதுக்கீடு: வெற்றி வீடு திட்டத்தில் முதற்கட்டமாக ரூ.3,521 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

* திட்டத்தின் மொத்த கால அளவு: 2026 - 27 முதல் 2030 - 31 வரை.

வீட்டின் அளவு மற்றும் கட்டமைப்பு:

* புதிதாக கட்டப்படும் வீட்டின் பரப்பு குறைந்தது 360 சதுர அடி முதல் அதிகபட்சமாக 500 சதுர அடி வரை இருக்க வேண்டும்.

* அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக கான்கிரீட் தளம் மற்றும் சமையலறையை அமைக்க வேண்டும்.

* வீடுகளில் கழிப்பறை வசதி இல்லையெனில், தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் மூலம் ரூ.12,000 உதவித்தொகை தனியாக வழங்கப்படும்.

யாருக்கெல்லாம் கிடைக்கும் மற்றும் முன்னுரிமை:

* கிராமப்புறப் பகுதிகளில் குடிசைகளில் வசிப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* மண் சுவரால் கட்டியுள்ள வீடுகள் மற்றும் எளிதில் பழுதடையும் மேற்கூரைகள் கொண்ட வீடுகளில் வாழும் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* ஆதரவற்றோர் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் விருப்ப ஒதுக்கீட்டின் கீழ் 5% வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

Tamilnadu government
Tamilnadu government
இதையும் படியுங்கள்:
ஜீவன் பிரமாண் செயலியில் போட்டோ ரிஜெக்ட் ஆகுதா? – நிமிடத்தில் சரி செய்ய இதோ எளிய ட்ரிக்ஸ்!
வெற்றி வீடு திட்டம்

தேர்வு முறை:

* கிராமப்புறப் பகுதிகளில் மொபைல் செயலியின் வாயிலாக வீடுதோறும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வெற்றி வீடு திட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

* ஊரக வளர்ச்சித் துறையிடம் ஏற்கனவே இருக்கும் வீடற்றோர் பட்டியலில் இருந்தும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

* திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளின் உத்தேசப் பட்டியல், அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

கூடுதல் நிதி உதவி மற்றும் கடன் வசதிகள்:

* வீடு கட்ட அரசின் மானியம் போதவில்லை எனில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக 6% வட்டியில் ரூ.50,000 வரை கடன் உதவி செய்து தரப்படும்.

* கூட்டுறவு அல்லது வங்கிகள் மூலம் ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். இந்தக் கடனுக்கு 15 ஆண்டுகள் வரை அரசு சார்பில் 3% வட்டி மானியம் கிடைக்கும்.