பண்டிகை முடிஞ்சாலும் பஞ்சாயத்து குறையல: ஒரே நாளில் சரமாரியாக உயர்ந்த தங்கம் விலை.!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

ரா.வ.பாலகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரிப் படிப்புக்குப் பின் எழுத்தின் மீது ஆர்வம் கொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். கல்கி ஆன்லைனில் கட்டுரை எழுதுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர், செய்திகளை உடனுக்குடன் தருவதில் தேர்ந்தவர். பொருளாதாரம் பசுமை தொடர்பான கட்டுரைகளையும் சிறப்பாக எழுதி வருகிறார்.

Updated on: 

இன்று (நவம்பர் 9) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.760 குறைந்து ரூ.1,06,040-க்கு விற்பனையாகிறது. இன்று வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.205-க்கு விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகை முடிந்ததும் தங்கம் விலை உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் வெகுவாக சரிந்தது. அவ்வளவு தான் இனி தங்கம் விலையில் சரிவு ஆரம்பமாகி விட்டது என இல்லத்தரசிகள் முதல் நகைக் கடை வியாபாரிகள் வரை பலரும் மகிழ்ந்தனர். ஆனால் கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்தது. முதல் 4 நாட்களிலேயே ரூ.5,000-க்கும் மேல் உயர்ந்த தங்கம், அடுத்த நாளில் ரூ.2,000 வரை சரிந்தது. ஒட்டுமொத்தமாக கடந்த வாரத்தில் ஒரு சவரனுக்கு தங்கம் விலை ரூ.3,440 உயர்ந்தது.

நேற்று (நவம்பர் 8) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தங்கம் விற்பனை அமோகமாக நடந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஒருவேளை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்துக்கு கீழே சரிந்திருந்தால், தங்கம் விற்பனை மேலும் உயர்ந்திருக்கும்.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (நவம்பர் 8) தீபாவளி நாள் மட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் மாற்றமின்றி 1 கிராம் ரூ.13,160-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,280-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.205-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (நவம்பர் 9) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.95 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.760 உயர்ந்து, ரூ.1,06,040-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.205-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,05,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை
Gold Price
இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
தங்கம் விலை

தங்கம் விலை அடுத்து வரும் நாட்களில் சரிய வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பினர் கணித்துள்ளனர். ஆனால் ஒரு சவரன் ரூ.2 லட்சம் வரை உயரும் என்று மற்றொரு தரப்பினர் கணித்துள்ளனர். ஒருவேளை தங்கம் விலை இப்போது குறைந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் உயர்வை சந்திப்பது நிச்சயம் என்றும் கூறப்படுகிறது.

டாலரின் மதிப்பு உயர்ந்து வரும் நேரத்திலும், தங்க இறக்குமதியை உலக நாடுகள் அதிகரித்துள்ளன. தங்கத்தை வாங்கிக் குவிக்கும் நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, முதலீட்டாளர்களும் தங்க முதலீட்டைத் தொடங்குகின்றனர். இதனால் வருங்காலத்தில் தங்கம் விலை உயர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தங்கம் விலை ரூ.1 வட்சத்துக்கு கீழே வந்தால், இந்திய சந்தையில் தங்க விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி அரசு வேலை கனவு நனவாகும்! வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு: குரூப் 1, 2, 4 புதிய வயது பட்டியல் இதோ!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.