ரூ.5,000 சரிவு.! முதல் நாளே இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம், வெள்ளி விலை.!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 01) ஒரு சவரனுக்கு ரூ.240 வரை குறைந்துள்ளது. இன்றைய வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.5,000 குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.5,160 வரை குறைந்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆனால் செப்டம்பர் மாதத்தின் கடைசி நாளான நேற்று (செப்டம்பர் 30) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை திடீரென உயர்ந்தது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் கடந்த 10 நாட்களாக சரிந்து வந்த தங்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை மீண்டும் உயருமா அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (செப்டம்பர் 30) தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.70 உயர்ந்து ரூ.13,710-க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து ரூ.1,09,680-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.5 உயர்ந்து ரூ.245-க்கு விற்பனையானது.

இதையும் படியுங்கள்:
#BREAKING: "ஜெயலலிதாவுக்கு பிறகு... நான் தான்..." தாராபுரத்தை திணறடித்த விஜய் பேச்சு!
தங்கம் விலை

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 1) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து ரூ.13,680-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.240 குறைந்து, ரூ.1,09,440-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை
Gold Price Today
இதையும் படியுங்கள்:
சேப்பாக்கம் மைதானத்தில் தமிழக கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு பிரம்மாண்ட கௌரவம்.!
தங்கம் விலை

தங்கத்தின் திடீர் விலையேற்றம் கலக்கத்தை ஏற்படுத்தூனாலும், மீண்டும் குறையும் என்ற நம்பிக்கையில் சாமானிய மக்கள் உள்ளனர்.

சாமானிய மக்கள் அடிக்கடி தங்கம் வாங்குபவர்கள் அல்ல. இருப்பினும் தங்கம் விலை குறைந்தது என்ற தகவலைக் கேட்கும் போது கொஞ்சம் நிம்மதியாக உணர்வார்கள். ஆனால் முதலீட்டாளர்களைப் பொறுத்த வரை தங்கத்தின் விலை உயர்வையே எதிர்பார்ப்பார்கள்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம், அக்டோபர் மாதத்திலாவது ரூ.1 லட்ச்த்துக்கு கீழே வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com