தமிழ்நாட்டில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து இன்று பரப்புரையில் ஈடுபட்டார் முதல்வர் ஜோசப் விஜய்.
முதல்வர் விஜய் பரப்புரையில் தொடர்ந்து பேசுகையில், "ஜெயலலிதா மேடமுக்குப் பிறகு திமுகவை தைரியமாக எதிர்த்தது இந்த விஜய் தான். இது எம்ஜிஆர் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தெரியும். திமுகவுக்கு ஓட்டு போடுவீங்களா.. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மேடமுக்கு துரோகம் செய்த மற்றும் பலருக்கு ஓட்டு போடுவீங்களா.. தாராபுரம் மக்களே நீங்க எப்பவும் நேர்மையின் பக்கம் தான் நிப்பிங்க.. சத்தியம் பக்கம் தான் நிப்பிங்கனு தெரியும். அதனால் நீங்க நம்ம சத்தியபாமாவுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைப்பீங்கனு நம்புற.
இந்த 2 பேர் சொல்லும் பொய் எல்லாம் நம்பாதீங்க.. உங்கள்உங்கள் சின்னம் விசில்... நமது வெற்றி சின்னம் விசில்... அன்று நடந்தது அம்மா ஆட்சி... அடுத்து நடந்தது அப்பா ஆட்சி.. இப்போ நடப்பது நம் பிள்ளைகளின் ஆட்சி... நம்பிக்கையா இருங்க மக்களே.. இது நம்ம ஆட்சி. மீண்டும் சந்திப்போம்.. நன்றி மக்களே.." என உரையை முடித்தார் முதல்வர் விஜய்.
முதல்வர் விஜய் பேசுவதற்கு முன்பு தவெக வேட்பாளர் சத்யபாமா பேசினார். அவர் பேசும் போது, "நான் தவறு செய்யவில்லை. தவறு செய்தால் தவெகவில் இணைய முடியுமா.. அப்படி இணையத் தான் தலைவர் விஜய் விடுவாரா.. அப்படி விட்டால் தான் வேட்பாளராக அறிவிப்பாரா. நான் தவறு செய்யவில்லை.. நேர்மையுடன் இருக்கிறேன். அதிமுக திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பியதால் தான் நான் விலகினேன். அப்போது எம்ஜிஆர். இப்போது தளபதி. இவர் தான் நம் தலைவர். தாராபுரம் மக்களே விசில் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்" எனப் பேசினார்.
முதல்வர் விஜய் இமமுறை திமுகவை நேரடியாகவும், அதிமுகவை மற்றவை என மறைமுகமாகவும் விமர்சித்தார். முதல்வரின் இந்தப் பேச்சு இன்று தாராபுர மக்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மதுராந்தகத்தில் பேசியது போல் தாராபுரத்தில் முதல்வர் ஆக்ரோஷமாக பேசவில்லை. இருப்பினும், இதுவரை தவெக கொண்டு வந்த திட்டங்களை பேசியும், திருப்பூர் மாவட்டத்திற்கானஸதிட்டங்களை அறிவித்து, திமுகவை பற்றி பேசியும், அதிமுகவை விமர்சித்தும் ஓட்டு கேட்டுள்ளார்.