சேப்பாக்கம் மைதானத்தில் தமிழக கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு பிரம்மாண்ட கௌரவம்.!

சேப்பாக்கம் மைதானத்தில் 3 தமிழ் சிங்கங்களின் பெயர்கள்: TNCA அதிரடி முடிவு!
தமிழக கிரிக்கெட் வீரர்கள்
Tamilnadu Cricketers
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

உலகளவில் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டாக கிரிக்கெட் இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்களின் பங்கும் அதிகம். அவ்வகையில் சர்வதேச அளவில் சாதனை படைத்த மூன்று தமிழர்களை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதன்படி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதான ஸ்டாண்டுகளுக்கு இந்தியாவின் முன்னாள் வீரர்களான வெங்கடராகவன், ஸ்ரீகாந்த் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட உள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தான் தமிழகத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்ட உசேன் போல்ட்..! ஓட்டப்பந்தய வீரரானது எப்படி தெரியுமா?
தமிழக கிரிக்கெட் வீரர்கள்

வருகின்ற டிசம்பர் 12-ம் தேதி ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான பிக் பாஷ் லீக் சென்னையில் தொடங்குகிறது. ஐபிஎல் போட்டிக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், பிக் பாஷ் தொடரை உலகளவில் பிரபலப்படுத்த இந்தத் தொடர், தற்போது முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்பட இருக்கிறது.

இதன் முதல் போட்டி சென்னையில் நடைபெற இருப்பதால், அன்றைய தினமே தமிழக வீரர்களின் பெயர்களை பார்வையாளர் ஸ்டாண்டுகளுக்கு சூட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. டிசம்பர் 12-ம் தேதியன்று மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடக்கவுள்ளது.

தொடக்க ஆட்டத்திற்கு முன்பாக, ஸ்டாண்டுகளுக்கு தமிழக வீரர்களின் பெயர் பலகைகள் முறைப்படி திறந்து வைக்கப்பட உள்ளது.

கௌரவிக்கப்படும் வீரர்கள்:

1. எஸ்.வெங்கடராகவன்: ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 2 முறை (1975, 1979) இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியுள்ளார் வெங்கடராகவன். 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 15 ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஒரு பந்துவீச்சாளர் கூட இந்திய அணியின் கேப்டனாக முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டியவர் வெங்கடராகவன். இந்திய அணியை வழிநடத்திய முதல் தமிழக கேப்டனும் இவர் தான். ஓய்வுக்குப் பிறகு சர்வதேச அளவில் புகழ்பெற்ற நடுவராகவும் தனது பணியை சிறப்பாக ஆற்றினார்.

தமிழக கிரிக்கெட் வீரர்கள்
TN Cricketers
இதையும் படியுங்கள்:
#BREAKING: "ஜெயலலிதாவுக்கு பிறகு... நான் தான்..." தாராபுரத்தை திணறடித்த விஜய் பேச்சு!
தமிழக கிரிக்கெட் வீரர்கள்

2. கே.ஸ்ரீகாந்த்:

இந்தியாவின் 2 ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளிலும் முக்கியப் பங்காற்றியவர் ஸ்ரீகாந்த். தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவுக்கு பல போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார். 1983-ல் இந்தியா வென்ற முதல் உலகக்கோப்பை அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.

43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2062 ரன்களும், 146 ஒருநாள் போட்டிகளில் 4,091 ரன்களும் குவித்துள்ளார். 2011-ல் இந்தியா மீண்டும் உலகக்கோப்பையை வென்றதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். ஏனெனில் அப்போதைய தேர்வுக்குழுத் தலைவராக தோனி தலைமையில் சிறந்த இந்திய அணியை தேர்வு செய்து உலகக்கோப்பைக்கு அனுப்பியவர் இவர் தான்.

3. ஆர்.அஸ்வின்:

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த கிரிக்கெட்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்தார். ஒருபுறம் தனது மாயாஜால ஸ்பின் பவுலிங் மூலமாக எதிரணியைத் திணறடித்த இவர், தேவைப்படும் போதெல்லாம் அணிக்கு ரன்களையும் அடித்துக் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் அஸ்வின் தான். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் மொத்தம் 537 விக்கெட்டுகளை எடுத்து, இந்திய அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

106 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 3503 ரன்களையும் குவித்துள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டம் வெல்வதற்கு இவரது பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. கேப்டன் கூல் தோனியின் நம்பிக்கைக்குரிய பௌலராக அஸ்வின் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

logo
Kalki Online
kalkionline.com