ஷாக்.!! மீண்டும் எகிறியது தங்கம் விலை.! 2 நாட்களில் ரூ.1,360 உயர்வு.!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
Gold price | தங்கம் விலை
Gold price | தங்கம் விலை
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்று (அக்டோபர் 10) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.520 உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை ரூ.1,360 வரை உயர்ந்துள்ளது. இன்றும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாகவே வெள்ளி விலை மாற்றமில்லாமல் தொடர்கிறது.

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.840 வரை உயர்ந்தது. இந்த விலை உயர்வு சிறிதளவே என்றாலும், மேலும் விலை உயர்வு தொடருமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இந்நிலையில் வருங்காலத்தில் தங்கம் மிகச் சிறந்த முதலீட்டுப் பொருளாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இனி வரும் மாதங்களில் தங்கத்தின் விலை உயரும் என்ற கணிப்புகள் தான் அதிகம் வெளிவருகின்றன.

தங்கம் வாங்குகிறோமோ இல்லையோ தங்கத்தின் விலை சரிந்தது என்ற செய்தியைக் கேட்டாலே இங்கு பல இல்லத்தரசிகள் நிம்மதி அடைவதுண்டு. இந்த வருட இறுதிக்குள் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே வருமா அல்லது உச்சபட்ச விலையை எட்டுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 9 தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. இதன்படி 1 கிராம் தங்கம் ரூ.13,815-க்கும், ஒரு சவரன் ரூ.1,10,520-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.245-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 10) ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.13,880-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து, ரூ.1,11,040-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை
Gold rate
இதையும் படியுங்கள்:
இனி ஒரு எழுத்துப் பிழையும் வரக்கூடாது: ஆதார் பெயர் திருத்த விதிகளில் அதிரடி மாற்றம்!
Gold price | தங்கம் விலை

இந்தியன் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை உயர்த்திய போதிலும், தங்கத்தின் விலை நேற்று உயர்ந்தது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இருப்பினும் வங்கி முதலீடுகள் அதிகரிக்க சில நாட்கள் ஆகும் என்பதால், அடுத்து வரும் நாட்களில் தங்கத்தின் விலை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தங்கத்தின் மீதான முதலீட்டில் சாமானிய மக்களும் கவனம் செலுத்த வேண்டும். வருங்காலத்தில் தங்கத்தை வாங்க திட்டமிட்டிருந்தால், நாட்களைக் கடத்தாமல் உடனே வாங்கி விடுவது நல்லது. இல்லையெனில் அடுத்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை ரூ.2 லட்சத்தை எட்டவும் வாய்ப்புள்ளது.

அந்த சமயத்தில் முன்னரே வாங்கி இருக்கலாமே என வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை. இந்தியாவில் பல பேர் இப்படி வருத்தப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை நிலை

இதையும் படியுங்கள்:
தமிழ்ப் பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு.! யார் இந்த நவநீதம் பிள்ளை.!
Gold price | தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com