இனி ஒரு எழுத்துப் பிழையும் வரக்கூடாது: ஆதார் பெயர் திருத்த விதிகளில் அதிரடி மாற்றம்!

உங்கள் ஆதார் விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்க புதிய வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றுங்கள்.
ஆதார் பெயர் திருத்தம்
Aadhar Card Name Correction
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இந்தியாவில் மிக முக்கியமான தனிநபர் அடையாள ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. வங்கிக் கணக்கு முதல் அரசின் அனைத்து சேவைகளிலும் பயன்பெற ஆதார் கார்டு இன்றியமையாத ஆவணமாக இருக்கிறது. இந்நிலையில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் மேற்கொள்தற்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ஆதார் ஆணையம் (UIDAI).

நாட்டில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் புதிய ஆதார் விண்ணப்பம், ஆதார் கார்டில் முகவரி, பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தங்கள் செய்து தரப்படும். இதற்காக ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆதார் கார்டில் திருத்தம் மேற்கொண்டால், அப்டேட் ஆவதற்கு சுமார் 1 வார கால அவகாசம் தேவைப்படும். இருப்பினும் ஆதார் கார்டு திருத்தங்கள் அதிகளவில் நிராகரிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் மத்தியில் அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்:
இனி ஆதார் சென்டர் தேடி அலைய வேண்டாம்! கூகுள் மேப்ஸில் வந்தாச்சு புதிய வசதி!
ஆதார் பெயர் திருத்தம்

ஆதார் கார்டு திருத்தங்கள் முழுக்க முழுக்க ஆன்வைனில் தான் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஒரு எழுத்து தவறுதலாக இருந்தால் கூட, உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

ஆனால் ஒரு சில திருத்தங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கு இணைக்கப்பட்ட ஆவணங்கள் சரியாக இருந்தும் கூட நிராகரிக்கப்படுவது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆதார் கார்டில் உள்ள பெயரில் திருத்தம் மேற்கொள்வதற்கான புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதார் கார்டில் உள்ள பெயரின் முதலெழுத்து விரிவாக்கம், சுருக்க மாற்றம், பெயர் வரிசை மாற்றம், இடைப்பெயர் / குடும்பப் பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதல் ஆகியவற்றுக்கு தனி விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகள்:

1. பெயரில் ஏதேனும் சிறிய எழுத்துப் பிழைகள், பெரிய எழுத்து மற்றும் தேவையற்ற முற்றுப்புள்ளி போன்ற வடிவமைப்பு பிழைகளையும் இனி திருத்திக் கொள்ளலாம்.

2. பெயர் திருத்தத்திற்காக சமர்ப்பிக்கப்படும் அடையாளச் சான்றில் உள்ள எழுத்துக் கூட்டு, வரிசை மற்றும் சுருக்க வடிவத்தின் படியே ஆதார் கார்டில் பெயர் புதுப்பிக்கப்படும்.

3. சிறிய திருத்தங்களாக இருந்தாலும் சரியான பெயர் இடம்பெற்ற மற்றும் செல்லுபடியாகின்ற அடையாளச் சான்றை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும்.

4. திருமணம் மற்றும் விவாகரத்தின் போது முழுமையான பெயர் மாற்றத்துக்கு தனித்தனி ஆவணங்கள் மற்றும் உறுதிமொழிப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

Correction of documents
Correction of documents
இதையும் படியுங்கள்:
நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி.! ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை.! இன்றைய ரேட் இதுதான்.!
ஆதார் பெயர் திருத்தம்

புதிய விதிகளின்படி இனி பெயர் திருத்தத்திற்கு செல்லும் பொதுமக்கள், சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விடும். அனைத்து அரசு உதவிகள் மற்றும் சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியம் என்பதால், அதில் உள்ள தகவல்கள் மற்ற ஆவணங்களுடன் பொருந்தும் வகையில் துல்லியமாக இருக்க வேண்டும்.

திருமணம் செய்த பெண்கள் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யும் போது, கணவரின் அசல் ஆதார் கார்டை கொண்டு செல்ல வேண்டும். அதோடு கணவரின் ஆதார் கார்டில் உள்ள முகவரியை எழுத்துப்பிழை இன்றி அப்படியே கொடுக்க வேண்டும்.

ஆதார் கார்டில் பெயர் மற்றும் முகவரி திருத்தம் மேற்கொண்ட திருமணமான பல பெண்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஒரே திருத்தத்தில் உங்கள் பெயர் மற்றும் முகவரி திருத்தத்தை மேற்கொள்வது தான் சிறந்தது.

logo
Kalki Online
kalkionline.com