தமிழ்ப் பெண்ணுக்கு அமைதிக்கான நோபல் பரிசு.! யார் இந்த நவநீதம் பிள்ளை.!

அமைதிக்கான நோபல் பரிசு
Nobel Prize
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வழக்குரைஞரும், தமிழ் வம்சாவளியுமான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழித் தோன்றலான நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

அமைதிக்கான நோபல் பரிசை பெறும் முதல் தமிழ்ப் பெண் நவநீதம் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் அமைதி மற்றும் சர்வதேச சட்ட உரிமைகளை மேம்படுத்திய காரணத்திற்காக நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இனி ஒரு எழுத்துப் பிழையும் வரக்கூடாது: ஆதார் பெயர் திருத்த விதிகளில் அதிரடி மாற்றம்!
அமைதிக்கான நோபல் பரிசு

யார் இந்த நவநீதம் பிள்ளை:

* நவநீதம் பிள்ளை, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ் வம்சாவளி வழக்குரைஞர், நீதிபதி மற்றும் சர்வதேச மனித உரிமைப் போராளி ஆவார்.

* மனித உரிமைகளை நிலைநாட்டவும், நிறவெறி ஆட்சிக்கு எதிராகவும் இவர் ஆற்றிய பணிகள் வரலாற்றில் என்றென்றும் பேசப்படும்.

* புகழ்பெற்ற ஹார்வர்ட் சட்டப் பள்ளியில், டாக்டர் பட்டத்தைப் பெற்ற முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமை இவரையே சேரும்.

* 1995 ஆம் ஆண்டு ஐநா சபையால் ICTR நீதிபதியாக நியமிக்கப்பட்டு, பிறகு அதன் தலைவராக 1999 - 2003 வரை பதவி வகித்தார்.

* ழான்-பால் அகயேசு வழக்கில், போர்க் காலங்களில் பெண்களுக்கு எதிரான திட்டமிட்ட பாலியல் வன்முறை என்பது வெறும் குற்றம் மட்டுல்ல; அது ஒரு இனப் படுகொலைக்கு சமமான குற்றம் என உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் படி வரலாற்றில் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கினார்.

* 1941-ல் நாராயணசாமி மற்றும் சாந்தம்மாள் ஆகியோருக்கு மகளாக பிறந்தார் நவநீதம் பிள்ளை.

* 1891 ஆம் ஆண்டு கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாக தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற தமிழர்கள் வழித் தோன்றலில் பிறந்தவர் நவநீதம் பிள்ளை.

* 1973-ல் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த போது, சட்ட உதவி செய்தவர் நவநீதம் பிள்ளை.

* சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.

* ஐநா மனித உரிமைகள் ஆணையராக 6 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

* உலகமெங்கும் சிறுபான்மையினர் ஒடுக்குமுறை, போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார். ​

* இலங்கையில் இறுதிப் போர்க்கால மனித உரிமை மீறல்களை எதிர்த்து துணிச்சலாக குரல் கொடுத்ததோடு, ஐநா மூலம் அறிக்கையும் வெளியிட்டார்.

* சிறுபான்மையினர் உரிமைகளுக்காக ஐநா சபையில் அதிகாரப்பூர்வ பிரச்சாரத்தை முன்னெடுத்த முதல் ஐநா சபைத் தலைவர் இவர் தான்.

* இஸ்ரேலில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகள் குறித்து விசாரித்த ஐநா மனித உரிமைகள் பேரவை விசாரணைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டார் நவநீதம் பிள்ளை.

* தமிழர் ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பது, தமிழ்நாட்டிற்கே பெருமை மிகு தருணமாகும்.

* தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சிக்கு எதிராக வாதாடிய நவநீதம் பிள்ளை, நெல்சன் மண்டேலா அதிபரானதற்கு பிறகு 1995 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தின் முதல் வெள்ளையர் அல்லாத பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

* தென்னாப்பிரிக்காவில் நீதிபதியாக பதவி வகித்த நவநீதம் பிள்ளை, இன்று நோபல் பரிசையும் வென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா?இந்த சிறப்பு முகாமை மிஸ் பண்ணாதீங்க! முழு வழிகாட்டி!
அமைதிக்கான நோபல் பரிசு
logo
Kalki Online
kalkionline.com