காலையிலேயே வந்த குட் நியூஸ்.! தங்கம் விலை திடீர் சரிவு.!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்று (அக்டோபர் 12) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.320 குறைந்துள்ளது. இன்றும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களாக வெள்ளி விலை மாற்றமில்லாமல் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக சரிந்து வந்தது. இருப்பினும் கடந்த வார இறுதியில் தொடர்ந்து 2 நாட்கள் உயர்வை சந்தித்தது. இதன்படி ஒரு சவரனுக்கு ரூ.1,360 வரை விலை உயர்ந்தது. இந்த வாரத்திலும் விலை உயர்வு தொடருமா அல்லது மீண்டும் வீழ்ச்சிப் பாதைக்கு செல்லுமா என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

ரெப்போ வட்டி உயர்வுக்குப் பிறகு பல வங்கிகள் கடனுக்கான வட்டி விகித்ததை உயர்த்தியுள்ளன. இதனால் இஎம்ஐ உயரும் என்ற கவலை ஒருபுறம் இருக்க, தங்கத்தின் விலையும் உயர்வது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாகும்.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 11) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. இதன்படி 1 கிராம் தங்கம் ரூ.13,880-க்கும், ஒரு சவரன் ரூ.1,11,040-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.245-க்கு விற்பனையானது

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 12) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.13,840-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து, ரூ.1,10,720-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
ரெப்போ வட்டி உயர்வு.!! எகிறப் போகும் EMI: நிதி நெருக்கடியில் இருந்து தப்பிக்க சூப்பர் டிப்ஸ்!
தங்கம் விலை
Gold and Silver Rates
Gold and Silver

ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்ததால், தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்கிகள் கடனுக்கான வட்டியை மட்டுமே உயர்த்தியுள்ளன. பிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட வங்கி சேமிப்புத் திட்டங்களின் வட்டியை உயர்த்தவில்லை. இதனால் வங்கி சேமிப்புகளில் இன்னும் முதலீடுகள் அதிகரிக்கவில்லை. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை குறையவில்லை. சேமிப்புத் திட்டங்களின் வட்டியை வங்கிகள் உயர்த்தினால், தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்து, தானாகவே விலை குறையும்.

தங்கத்தின் விலை தற்போது அதன் உச்சபட்ச விலையில் இருந்து 23% வரை சரிந்துள்ளது. அதேபோல் வெள்ளியின் விலை அதன் உச்சபட்ச விலையில் இருந்து 50% வரை சரிந்துள்ளது. இந்த சரிவு முதலீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலை உயர்ந்த போது முதலீடு செய்தவர்கள், விலை குறைந்து விட்டதே என கவலையுறாமல், விலை உயரும் வரை காத்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
காணாமல் போகும் குளிர்காலம்: வானிலை மையத்தின் அதிர்ச்சி அறிக்கையும், உணவுப் பஞ்ச அபாயமும்!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com