2 நாட்களில் ரூ.1,560 சரிவு.! தாறுமாறாக சரியும் தங்கம் விலை.!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price Today
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்று (அக்டோபர் 13) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.280 குறைந்துள்ளது. இன்றும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. தங்கத்தின் தொடர் விலை சரிவு, சாமானிய மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.1,280 குறைந்தது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் ரூ.960 குறைந்து, ரூ.1,09,760-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 முறை குறைந்தது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரெப்போ வட்டி உயர்வின் தாக்கம் இப்போது தான் தங்கத்தின் மீது எதிரொலித்துள்ளது. வங்கி சேமிப்புகளில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்தால், தங்கத்தின் விலையில் மேலும் சரிவு இருக்கும்.

நேற்றைய விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 12) 1 கிராம் தங்கம் ரூ.160 குறைந்து, ரூ.13,720-க்கும், ஒரு சவரன் ரூ.1,280 குறைந்து ரூ.1,09,760-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் மாற்றமின்றி ரூ.245-க்கு விற்பனையானது.

Gold Price
Gold

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 13) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 குறைந்து ரூ.13,685-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.280 குறைந்து, ரூ.1,09,480-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்று தங்கத்தின் விலை 2 முறை குறைந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.1,560 குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
அஞ்சல் துறை vs வங்கி முதலீடு: எதில் லாபம் அதிகம்? முழுமையான வழிகாட்டி!
தங்கம் விலை

அமெரிக்க வட்டி விகித உயர்வு மற்றும் ரெப்போ வட்டி உயர்வின் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் தற்போது கணிசமாக குறைந்துள்ளன. இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது.

தங்கத்தின் விலை அதன் உச்சபட்ச விலையில் இருந்து 23 சதவிகிதமும், வெள்ளி விலை அதன் உச்சபட்ச விலையில் இருந்து 50% குறைந்துள்ளது. நடப்பாண்டின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்பட்ட இந்த சரிவு, நடப்பாண்டு முழுவதும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அடுத்த 2 வருடத்திற்குள் தங்கத்தின் விலை ரூ.2 லட்சமாக உயரும் என பொருளாதார வல்லுநர்களும், தங்க நகை வியாபாரிகளும் கணித்துள்ளனர்.

இது மட்டும் நடந்தால், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் தான். அதே சமயம், சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாக மாறி விடும்.

இதையும் படியுங்கள்:
இனி கரண்ட் கட்டே இருக்காது.! ரூ.35-க்கு முடிந்த மெகா டீல்: தமிழக அரசு இறக்கிய மெகா அஸ்திரம்.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com