இனி கரண்ட் கட்டே இருக்காது.! ரூ.35-க்கு முடிந்த மெகா டீல்: தமிழக அரசு இறக்கிய மெகா அஸ்திரம்.!

மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வெளிச்சந்தையில் அதிரடி கொள்முதல்.!
மின்சாரம் கொள்முதல்
Electricity
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு பிரச்சினை தலைதூக்கிய நிலையில், தனியாரிடம் இருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த வாரம் 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை கோரியது தமிழக அரசு.

இந்நிலையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்யும் டெண்டருக்கு இன்று (அக்டோபர் 12) தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக இனி வரும் நாட்களில் மின்வெட்டு பிரச்சினை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக கோடை காலங்களில் மின்வெட்டு பிரச்சினை ஏற்படுவது வழக்கமானது தான் என்றாலும், அதனை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் நடப்பாண்டில் எல்-நினோ தாக்கத்தால் தற்போது வரை வெப்பநிலை அதிகமாகவே இருக்கிறது. இதனால் மின் பயன்பாடு அதிகரித்த நிலையில், மின்சார தேவையும் அதிகரித்துள்ளது.

அதிகப்படியான மின் தேவையால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து பொதுமக்கள் அவ்வப்போது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இதையும் படியுங்கள்:
காலையிலேயே வந்த குட் நியூஸ்.! தங்கம் விலை திடீர் சரிவு.!
மின்சாரம் கொள்முதல்

விரைவில் மின்வெட்டு பிரச்சினை சரிசெய்யப்படும் என ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். அதற்கேற்ப சீரிய நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தற்போது வெளிச் சந்தையில் இருந்து மின்சாரத்தை வாஙக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மின்வெட்டு பிரச்சினையால் பொதுமக்கள் மட்டுமின்றி, அமைச்சர்களும் பாதிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களில் அமைச்சர்கள் பங்கேற்ற விழாக்களில் மின்வெட்டு ஏற்பட்டு, இருட்டிலேயே நிகழ்ச்சிகள் தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி இன்று (அக்டோபர் 12) தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர்கள் அலுவலகங்களில் மின்வெட்டு ஏற்பட்டது தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.

இந்நிலையில் மின்வெட்டு பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொண்ட தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.31.99 முதல் ரூ.37 வரை கொள்முதல் செய்ய தமிழக அரசு தயாராக இருந்தது.

கடந்த வாரம் தமிழக அரசு டெண்டர் கோரிய நிலையில், தற்போது 1 யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்யவுள்ளது தமிழ்நாடு மின்சாரத் துறை. இதன்படி இன்று (அக்டோபர் 12) முதல் அக்டோபர் 31 வரை வெளிச் சந்தையில் இருந்து சுமார் 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்யவுள்ளது மின்சாரத் துறை.

Electricity
Electricity
இதையும் படியுங்கள்:
கூட்டுறவு வங்கிகளில் வாராந்திர கடன் முகாம்: எந்த நாளில் என்ன கடன் கிடைக்கும்? முழு விவரம் இதோ!
மின்சாரம் கொள்முதல்

வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளதால், அடுத்த சில நாட்களில் மின்வெட்டு பிரச்சினை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசே மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதும் அவசியம். இல்லையெனில் மின்சாரத்தை கொள்முதல் செய்யவே பெருந்தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும்.

மின்சார கொள்முதலால் மக்களுக்கு என்ன பயன்?

* தனியாரிடம் இருந்து கூடுதல் மின்சாரம் பெறுவது, மின்வெட்டு ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

* குறைந்த விலையில் விற்கும் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுவதால், கொள்முதல் செலவு குறையும். இதனால் நுகர்வோருக்கு மின் கட்டண உயர்வு இருக்காது.

* தடையற்ற மின் விநியோகம் நீடித்தால் வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய வேலைகள் தடையின்றி இயங்கும். இதனால் பொருளாதார ஸ்திரத்தன்மை மேம்படுவதோடு, தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்கு தடையின்றி வேலையிருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com