வணிகர்களுக்கு தீபாவளி பரிசு: UPI கட்டண அமலாக்கம் ஒத்திவைப்பு – பின்னணி என்ன?

வணிகர்களே கொண்டாடுங்கள்! தள்ளிப்போன UPI கட்டண வசூல் – முழு விவரம் உள்ளே!
யுபிஐ கட்டணம் ஒத்திவைப்பு
UPI Fee
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இந்தியாவில் யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் அதிகளவில் நடைபெறும் சூழலில், வர்த்தக ரீதியான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி அக்டோபர் 15-ம் தேதி முதல் ரூ.2,000-க்கும் அதிகமான பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணத்தை வணிகர்கள் செலுத்த வேண்டும் என இந்திய தேசியச் செலுத்துதல்கள் கழகம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த கட்டண விதிப்பு முறை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சமீபத்திய நாட்களில் பேசப்பட்டது. அதற்கேற்ப வணிகர் தள்ளுபடி கட்டணத்தை (MDR) இந்த ஆண்டு முழுவதும் தள்ளி வைத்துள்ளது மத்திய அரசு. இதன்படி வருகின்ற ஜனவரி 1-ம் தேதி முதல் வணிக பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரிசையாக வருவதால் அதிகளவிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் நிகழும். இதன் காரணமாக கட்டண விதிப்பு முறையை தள்ளிப் போடுமாறு வணிகர்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை பரிசீலனை செய்த மத்திய அரசு, வணிகர்களின் கோரிக்கையை ஏற்று எம்டிஆர் கட்டண முறையை 2027 ஜனவரி 1-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்:
தங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்கணுமா? பில் போடும் முன் பார்க்க வேண்டிய 6 ரகசியங்கள்!
யுபிஐ கட்டணம் ஒத்திவைப்பு

கட்டண விவரம்:

ஜனவரி 1-ம் தேதி முதல் யுபிஐ பணப் பணப்பரிமாற்றத்தில் ரூ.3000-க்கு வணிகர்கள் ரூ.12 கட்டணமாக செலுத்த வேண்டும். ரூ.50,000-க்கு ரூ.200-ம், ரூ.75,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவா்த்தனைகளுக்கு ரூ.300 என உச்சவரம்பு கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணம் வாடிக்கையாளர்களுக்கு அல்ல; வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ பரிவர்த்தனைகள் மூலமாக தான் பணப்பரிமாற்றம் நடக்கின்றன. இந்நிலையில் இந்த எம்டிஆர் கட்டணத்தால், சிறு வணிகர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். பெரு வணிகர்களுக்கு பாதிப்பு இருந்தாலும், அது அவர்களை பெரிதாக பாதிக்காது.

யாருக்கு நல்லது?

* யுபிஐபரிவர்த்தனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள எம்டிஆர் கட்டணம் தள்ளிப் போயிருப்பது வணிகர்களின் வருமான இழப்பைத் தடுக்கும்.

* தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் அதிகளவிலான யூபிஐ பணப் பரிமாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளன. இதன் காரணமாக சிறு வணிகர்களுக்கு கணிசமான தொகை மிச்சமாகும்.

* அடுத்த ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதியிலிருந்து யுபிஐ-க்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால், பொங்கல் பண்டிகையின் போது வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். இருப்பினும் தற்சமயம் யுபிஐ கட்டணம் தள்ளிப் போயிருப்பது வரப் போகும் தீபாவளிக்கு வணிகர்களுக்கு மத்திய அரசு கொடுத்த போனஸாகவே பார்க்கப்படுகிறது.

UPI Transaction
UPI Transaction
இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு 15,659 சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த தேதிகளில் இயங்கும் தெரியுமா? உடனே நோட் பண்ணுங்க.!
யுபிஐ கட்டணம் ஒத்திவைப்பு

பொதுமக்கள் கவனிக்க வேண்டியவை:

* ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஷாப்பிங் என்பது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆகையால் ஷாப்பிங் முடித்த பிறகு உங்கள் பில்லை ஒரு முறைக்கு இருமுறை சரி பார்ப்பது நல்லது.

* உங்கள் பில்லில் யுபிஐ கட்டணம் அல்லது வேறு ஏதேனும் கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

* ஷாப்பிங் முடித்த பிறகு யுபிஐ பணப் பரிமாற்றம் செய்ய QR கோடை ஸ்கேன் செய்தவுடன், நீங்கள் பணம் செலுத்தும் நபரின் பெயரை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதன்மூலம் தவறான நபருக்கு பணம் செலுத்துவதைத் தவிர்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com