ஒரே நாளில் ரூ.5,000 சரிவு.! தலைகீழாக மாறிய தங்கம் விலை.. நகைப் பிரியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price Updates
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்று (அக்டோபர் 15) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.600 வரை குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,920 வரை குறைந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

முதலீட்டாளர்கள் மட்டும் தான் தினசரி தங்கம் விலையை தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். சாமானிய மக்கள் தங்கம் வாங்கச் செல்லும் போது தான் விலையைப் பார்க்கிறார்கள். அப்படி இல்லையெனில் பெரிய அளவில் தங்கத்தின் விலை உயர்வு அல்லது சரியும் போது விலையைப் பார்ப்பார்கள்.

தொடர்ந்து தங்கம் விலையை கவனித்து வருவது, முதலீட்டுக்கான வாய்ப்பை பெருக்க உதவும். தங்க முதலீடு பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் நிலையில், விலை சரியும் போது முதலீடு செய்வது தான் நல்ல யுக்தி.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 14) 1 கிராம் தங்கம் ரூ.95 குறைந்து, ரூ.13,590-க்கும், ஒரு சவரன் ரூ.760 குறைந்து ரூ.1,08,720-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.245-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 15) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75 குறைந்து ரூ.13,515-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.600 குறைந்து, ரூ.1,08,120-க்கு விற்பனையாகிறது.

இந்த வாரத்தில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்த நிலையில், மீண்டும் இன்று விலை குறைந்திருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.5,000 குறைந்து ரூ.2,40,000-க்கு விற்பனையாகிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளி, இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.5,000 குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் குறைந்திருப்பது டபுள் ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

Gold price
Gold jewelry
இதையும் படியுங்கள்:
தங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்கணுமா? பில் போடும் முன் பார்க்க வேண்டிய 6 ரகசியங்கள்!
தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏறுவதும், இறங்குவதுமாகவே இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் அதிகபட்சாமக ரூ.1,16,040 வரை விற்பனையானது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் குறையத் தொடங்கிய தங்கம் விலை அவ்வப்போது ஏறி ஏறி இறங்கியது. இதன் பிறகு அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே சரிவை சந்தித்து வரும் தங்கத்தின் விலை ரூ.7,000-க்கும் மேல் சரிந்துள்ளது.

இந்த விலை நிலவரங்களைப் பார்க்கும் போது அடுத்தடுத்த நாட்களில் விலை குறையும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது கணிப்பு மட்டுமே. தங்கம் விலை குறையும் என உறுதியாக யாரும் சொல்லவில்லை.

சர்வதேச பொருளாதாரத்தில் டாலரின் மதிப்பு உயரும் போது, தங்கத்தின் மீதான முதலீடுகள் குறையத் தொடங்கும். அப்படி முதலீடுகள் குறைந்தால், தங்கத்தின் விலை மேலும் சரிய வாய்ப்பு உருவாகும்.

இதையும் படியுங்கள்:
அக்.27 முதல் ரூ.10 லட்சம் ரயில்வே காப்பீடு: யாருக்கெல்லாம் கிடைக்கும்.? யாருக்கெல்லாம் கிடைக்காது.?
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com