அக்.27 முதல் ரூ.10 லட்சம் ரயில்வே காப்பீடு: யாருக்கெல்லாம் கிடைக்கும்.? யாருக்கெல்லாம் கிடைக்காது.?

ரயில் டிக்கெட் காப்பீடு: கவுண்டர் டிக்கெட்டுகளுக்கும் ரூ.10 லட்சம் வரை பாதுகாப்பு
ரயில்வே காப்பீடு
Railway Insurance
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இந்தியாவில் பாதுகாப்பான மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏற்றதாக இருப்பது ரயில் போக்குவரத்து தான். நீண்ட தூரப் பயணங்களுக்கு பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை தான் அதிகம் நம்பியுள்ளனர்.

பொதுவாக ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் ரயில்வே துறை சார்பில் காப்பீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் மட்டுமின்றி ரயில்வே ஸ்டேஷன் கவுண்டர்களில் வாங்கப்படும் அனைத்து ரயில் டிக்கெட்டுகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும் என ரயில்வே துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் சாதாரண ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு கூட இனி ரயில்வே காப்பீடு கிடைக்கும்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர். இந்த ரயில் விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் வருகிறது.

சமீபத்தில் நடந்த விசாரணையில் ரயில்வே நடை மேம்பாலங்கள், தண்டவாளங்களை சுற்றி வேலி அமைத்தல் மற்றும் ரயில்வே கவுண்டர்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு காப்பீடு இல்லாதது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதையும் படியுங்கள்:
ரயில் பயணிகள் கவனத்திற்கு..! இன்று முதல் அமலுக்கு வரும் புது ரூல்ஸ்.!
ரயில்வே காப்பீடு

ரயில்வே கவுண்டர்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளுக்கும் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு முந்தைய விசாரணையின் போது தெரிவித்தது. ஆனால் அதற்குரிய எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் வருகின்ற 2026 அக்டோபர் 27-ம் தேதி முதல் அனைத்து ரயில்வே டிக்கெட்டுகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ரயில்வே அமைச்சகம் கட்டாயம் செயல்படுத்த வேண்டும். காப்பீட்டை செயல்படுத்த தவறினால், அதற்கு ரயில்வே வாரியமே நேரடியாக பொறுப்பேற்க நேரிடும். சாமானிய மக்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் ரயில்வே அமைச்சகத்தின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் அளிக்கிறது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ரயில் விபத்துகளை தடுக்கும் கவச் அமைப்பை விரிவுபடுத்துதல், வேலி அமைத்தல் மற்றும் நடைமேம்பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட 3 முக்கியப் பிரிவுகளில் ரயில்வே வாரியம் எடுத்த சிறப்பு நடவடிக்கைகள் என்னென்ன மற்றும் அதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது போன்ற விவரங்களைத் தாக்கல் செய்யாததற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

விபத்துகளை குறைக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே துறை தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், இத்தகைய வாக்குறுதிகள் அனைத்தும் காகிதத்தில் மட்டுமே உள்ளன. செயல்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டது போல் தெரியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகின்ற நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

train travel
train travel
இதையும் படியுங்கள்:
விபத்தைத் தடுக்கும் கவச் தொழில்நுட்பம்! இனி இந்த இரயில்களிலும் பொருத்தப்படும்!
ரயில்வே காப்பீடு

யாருக்கெல்லாம் ரயில்வே காப்பீடு கிடைக்கும்?

* பொருளாதாரத்தில் பின்தங்கிய பயணிகள் பலரும் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கவுண்டர்களில் தான் டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி, இனி ரயில் டிக்கெட் வாங்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் காப்பீடு கிடைக்கும்.

* ஆன்லைன் முறையில் டிக்கெட் வாங்குவோருக்கு என்ன காப்பீடு வழங்கப்படுகிறதோ, அதே மாதிரியான காப்பீடு தான் கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பவர்களுக்கும் கிடைக்கும்.

* தகுதியான டிக்கெட்டுடன் பயணிக்கும் அனைவருக்கும் இனி ரயில்வே காப்பீடு கிடைக்கும்.

* எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் மட்டுமின்றி சாதாரண புறநகர் ரயில்களில் பயணிப்பவர்களுக்கும் காப்பீடு கிடைக்கும்.

யாருக்கெல்லாம் கிடைக்காது?

* ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்வோருக்கு ரயில்வே காப்பீடு கிடைக்காது.

.

எவ்வளவு காப்பீடு கிடைக்கும்?

* ஒரு பயணியின் ரயில் டிக்கெட்டுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 45 பைசா முதல் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு வழங்கப்படும்.

* ரயில்வே விபத்தில் மரணம் அல்லது நிரந்தர முழு இயலாமைக்கு - ரூ.10 லட்சம்

* நிரந்தர பகுதி இயலாமைக்கு - ரூ.7.5 லட்சம்

* மருத்துவமனை செலவுகளுக்கு - ரூ.2 லட்சம்

logo
Kalki Online
kalkionline.com