இனி குறையுமே தவிர உயராது.! ட்விஸ்ட் கொடுத்த தங்கம் விலை.! இன்றைய ரேட் என்ன தெரியுமா.?

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
Gold Price
Goldimage credit : ETV Bharat
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

22 காரட் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (அக்டோபர் 16) மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.2,920 வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களில் ரூ.2,920 வரை குறைந்தது. இதுதவிர கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாறாமல் இருந்த வெள்ளியின் விலை நேற்று ஒரே நாளில் ஒரு கிலோவிற்கு ரூ.5,000 குறைந்தது. இந்த விலை சரிவு மேலும் நீடிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

சர்வதேச சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிந்ததிருப்பதால், இந்திய சந்தையிலும் விலை குறைந்துள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 15) 1 கிராம் தங்கம் ரூ.75 குறைந்து, ரூ.13,515-க்கும், ஒரு சவரன் ரூ.600 குறைந்து ரூ.1,08,120-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை 1 கிராம் ரூ.5 குறைந்து, ரூ.240-க்கு விற்பனையானது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 16) தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. இதன்படி 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,515-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,120-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.240-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 4 நாட்களாக சரிந்து வந்த தங்கம், இன்று மாற்றமின்றி விற்பனையாவது, சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

gold price
gold price
இதையும் படியுங்கள்:
2029-ல் வரும் BS-7 யாருக்கு சாதகம்? சுற்றுச்சூழல் பாதுகாப்பா? சாமானியன் பாக்கெட்டுக்கு வேட்டா?
Gold Price

தங்கத்தின் விலை நடப்பாண்டில் உச்சபட்ச விலையாக ரூ.1.30 லட்சத்திற்கும் மேல் உயர்ந்தது. உச்சபட்ச விலையில் இருந்து தற்போது 23% வரை விலை சரிந்தாலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் 30% மேல் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டே தங்கத்தை வாங்காமல் விட்டு விட்டோமே என பலரும் கவலை அடைந்தனர். மேலும் விலை உயரும் என்ற கணிப்புகள் அதிகமாக வந்ததால், அதன் பிறகு தங்கத்தில் அதிகம் பேர் முதலீடு செய்துள்ளனர்.

அடுத்த 2 ஆண்டுகளில் தங்கத்தின் விலை ரூ.2 லட்சமாக உயரும் எனக் கூறப்படுகிறது. இது மட்டும் நடந்தால், தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் தான். இந்நிலையில் இப்போதும் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. இருப்பினும் சமீபத்தில் ரெப்போ வட்டி உயர்த்தப்பட்ட பிறகு வங்கி முதலீடுகளிலும் சிலர் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தங்கத்தின் விலை உயர வேண்டும் என முதலீட்டாளர்களும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்துக்கு கீழே சரிய வேண்டும் என சாமானிய மக்களும் எதிர்பார்க்கின்றனர். இந்த இரண்டில் நடக்கப் போவது எது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மறந்திடாதீங்க.! வரும் ஞாயிறு அக்.18 ரேஷன் கடைகள் செயல்படும்: எந்தெந்த பொருட்கள் கிடைக்கும்?
Gold Price
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com