பண்டிகை நாளுன்னு கூட பார்க்காம இவ்வளவு உயர்வா? இன்றைய தங்கம், வெள்ளி ரேட் இதோ..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
தங்கம் விலை
Gold Price
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

இன்று (அக்டோபர் 19) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே சரிந்து வருகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் உயர்ந்த தங்கம், செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை சவரனுக்கு ரூ.8,000-க்கும் மேல் குறைந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் சரிவு இருந்தாலும், பெரிய அளவில் இல்லை.

2026-ம் ஆண்டு முடிய இன்னும் 73 நாட்களே மீதமுள்ள நிலையில், ஆண்டின் இறுதியிலாவது தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கு கீழே சரியுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் தங்கத்தின் விலை உயரும் என்ற கணிப்புகள் இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

எதுவாக இருந்தாலும் சர்வதேச பொருளாதார சந்தை மற்றும் தங்கத்தின் மீதான முதலீடுகளே நிர்ணயம் செய்யும். ஆகையால் நிகழ்கால தங்கத்தின் விலை தான் சிறந்தது என்ற எண்ணத்தோடு, தங்கம் வாங்க நினைப்பவர்கள் இப்போதே வாங்கி விடுவது நல்லது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்:

நேற்று (அக்டோபர் 18) ஞாயிற்றுக்கிழமை என்பதால் 1 கிராம் தங்கம் மாற்றமின்றி ரூ.13,535-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,280-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலையும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.240-க்கு விற்பனையானது

இன்றைய விலை நிலவரம்:

தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஆயுத பூஜை தினமான இன்று (அக்டோபர் 19) ஆபரணத் தங்கத்தின் விலை மளமளவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்து, ரூ.1,08,560-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.240-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.

Gold
Gold
இதையும் படியுங்கள்:
தங்கம் வாங்கும்போது ஏமாறாமல் இருக்கணுமா? பில் போடும் முன் பார்க்க வேண்டிய 6 ரகசியங்கள்!
தங்கம் விலை

தங்கம் பாதுகாப்பான முதலீடு வகைகளில் ஒன்றாக இருக்கிறது. பணவீக்கம் உயரும் போதும், பொருளாதார நிலைமை சரியும் போதும் அதனை சீர்படுத்த தங்கம் உதவும் என்ற நம்பிக்கையில் தான் உலக நாடுகள் தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றன.

நடப்பாண்டில் அதிக தங்கத்தை வாங்கிய நாடாக சீனா இருக்கிறது. அதேசமயம் இந்தியன் ரிசர்வ் வங்கியும் தங்கத்தை அதிகளவில் இருப்பு வைத்துள்ளது. வருங்காலத்தில் தங்கத்தின் மதிப்பு தான் பல நாடுகளின் நிதிநிலைமையைக் காப்பாற்ற போகும் ஆயுதமாக இருக்கப் போகிறது.

ஒருபுறம் உலக நாடுகள் தங்கத்தை வாங்கும் நிலையில், பொதுமக்களும் தனிநபர் பயன்பாட்டுக்காக ஆபரண தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். விலை உயர்ந்தாலும், மேலும் உயர வாய்ப்புள்ளதால் இப்போதே வாங்கி விடலாம் என ஒருதரப்பு மக்கள் தங்கத்தை வாங்கி வருகின்றனர்.

தற்போது தங்கத்தின் விலை சரிந்தாலும், ஆண்டின் இறுதியில் விலை உயரும் என்ற கணிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இதனால் அடுத்த ஆண்டில் தங்கத்தின் விலை எப்படி இருக்கப் போகிறது என்ற பயம் இப்போதே தொடங்கி விட்டது.

இதையும் படியுங்கள்:
கனமழை எச்சரிக்கை: சென்னையில் அவசர உதவிக்கு யாரை அழைப்பது? மண்டல வாரியாக உதவி எண்கள் இதோ.!
தங்கம் விலை
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
logo
Kalki Online
kalkionline.com