

இன்று (அக்டோபர் 20) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.640 குறைந்து ரூ.1,07,920-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது
ஆயுத பூஜை தினமான நேற்று (அக்டோபர் 19) தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது. பண்டிகை நாளிலும் தங்கத்தின் விலை உயர்ந்தது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், அடிக்கடி விலை உயர்வும் ஏற்படுகிறது.
விலை குறைகிறதே விரைவில் ரூ.1 லட்சத்துக்கு கீழே வந்து விடும் என நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள் திடீரென தங்கம் விலை உயர்ந்து விடுகிறது.
கடந்த ஆண்டின் இறுதியில் ரூ.1 லட்சத்தை எட்டிய தங்கம் விலை, அதற்கு கீழே இன்னும் குறையவே இல்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக விலை குறையும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும் டிசம்பர் மாதத்திற்குள் மேலும் விலை உயரும் என்ற கணிப்புகளும் தொடர்ந்து வெளிவருகின்றன.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்:
நேற்று (அக்டோபர் 19) 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.35 உயர்ந்து ரூ.13,570-க்கும், ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ.1,08,560-க்கும் விற்பனையானது. வெள்ளியின் விலை நேற்று மாற்றமின்றி 1 கிராம் ரூ.240-க்கு விற்பனையானது.
இன்றைய விலை நிலவரம்:
தங்க நகைப் பிரியர்கள் அனைவருக்கும் நிம்மதி அளிக்கும் வகையில், ஆயுத பூஜை தினமான இன்று (அக்டோபர் 20) தங்கத்தின் விலை சரசரவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ரூ.13,490-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.640 குறைந்து, ரூ.1,07,920-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்றும் மாற்றமின்றி 1 கிராம் ரூ.240-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.
நேற்று ஆயுத பூஜையில் தங்கத்தின் விலை உயர்ந்த சூழலில், விஜயதசமியில் விலை சரிந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு ஆறுதலைக் கொடுத்துள்ளது.
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் முதலீடுகள் குறைவதாக தகவல்கள் கூறுகூன்றன. முதலீடுகள் தொடர்ந்து குறையும் பட்சத்தில் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளது. இருப்பினும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் தங்கத்தை வாங்கி வருவதால், தங்கத்திற்கான தேவையும் சந்தையில் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இருப்பினும் இந்த சரிவு தற்காலிகமானது தான். எப்போது வேண்டுமானாலும் தங்கம் விலை திடீரென உயரலாம். விலை உயரும் போது அல்ல, விலை சரியும் போது முதலீடு செய்வது தான் முதலீட்டுக்கான சிறந்த யுக்தி
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.