#BREAKING : அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்க நாணயம் பெற இது கட்டாயம் ..!!

அண்ணன் சீர் திட்டம் தகுதி வரம்புகள் மற்றும் ஆவணங்கள்: தமிழ்நாடு அரசு அரசாணை!
ஆதார் கட்டாயம்
Annan Seer
ரா.வ.பாலகிருஷ்ணன்

நான் ஒரு பொறியியல் பட்டதாரி. இருப்பினும் எனக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் இருப்பதை எனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் அறிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக கவிதை, கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். வாசகர்கள் விரும்பும் புதுமையான கட்டுரைகளைத் தரமாக எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. டிஜிட்டலில் கட்டுரை எழுதுவதில் எனக்கு 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.

Updated on: 

தமிழ்நாட்டில் திருமணமாகும் பெண்களுக்கு அண்ணன் சீர் என்ற திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயத்துடன், ஒரு பட்டு சேலையை வழங்க தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 5-ம் தேதி அரசாணையை வெளியிட்டது. இத்திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.812 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு.

இத்திட்டத்தின் படி பயன்பெற வேண்டுமெனில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழே இருக்க வேண்டியது அவசியம். மேலும் திருமணம் தமிழ்நாட்டு எல்லைக்குள் நடைபெற வேண்டியது அவசியம். இந்நிலையில் அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் திருமணங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள ஏழைப் பெண்களின் திருமண செலவைக் குறைக்கவும், புதிய வாழ்வைத் தொடங்கும் திருமணப் பெண்களுக்கு, ஓர் அண்ணனாக தமிழக அரசு துணை நிற்கும் என்ற உறுதியை வெளிப்படுத்தவும் அண்ணன் சீர் திட்டம் தொடங்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
பண்டிகை நாளுன்னு கூட பார்க்காம இவ்வளவு உயர்வா? இன்றைய தங்கம், வெள்ளி ரேட் இதோ..!
ஆதார் கட்டாயம்

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் திருமணமாகும் பெண்கள் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் தனியொரு இணையதளம் விரைவில் உருவாக்கப்பட உள்ளது. அரசாணை வெளியான அக்டோபர் 5-ம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் திருமணமாகும் தகுதியுள்ள பெண்களுக்கு அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் தங்க நாணயமும், பட்டு சேலையும் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

தமிழக அரசு இன்று (அக்டோபர் 19) வெளியிட்ட அரசாணையில், “8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டு சேலை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்தில் பயனடைய ஆதார் எண் கட்டாயமாகும். தகுதியுள்ள பெண்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் இல்லாத பெண்கள் உடனே புதிய ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்தவர்கள், ஆதார் ரசீதுடன் பான் கார்டு உள்ளிட்ட 11 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம். புதிய ஆதார் வந்த பிறகு, ஆதார் எண்ணை சமர்ப்பிப்பது அவசியம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 காரட் தங்க நாணயம் மற்றும் பட்டு சேலைகள் ‘தமிழ்நாடு டெண்டர்கள் வெளிப்படைத்தன்மைச் சட்டம், 1996’ இன் கீழ் உரிய ஒப்பந்த புள்ளிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளன. தங்கத்தின் விலை ‘இந்தியன் புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA)’ நிர்ணயிக்கும் நிலவரப்படி கணக்கிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அண்ணன் சீர்
Annan Seer
இதையும் படியுங்கள்:
அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம் + பட்டுப் புடவை யாருக்கெல்லாம் கிடைக்கும்?
ஆதார் கட்டாயம்

அண்ணன் சீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக வருமான வரம்பைத் தெரிவிக்கும் வருமான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

அதோடு திருமணச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வயது சான்று மற்றும் புகைப்படம் ஆகியவை தேவைப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு சமூக நலத்துறை இணையதளத்தை பொதுமக்கள் தொடர்ந்து கண்காணிக்கலாம். இந்தத் திட்டம் 2026 இறுதியில் அல்லது 2027 தொடக்கத்தில் தொடங்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

யாருக்கெல்லாம் கிடைக்கும்? தகுதிகள் என்னென்ன?

* ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

* 2026 அக்டோபர் 5-ம் தேதியில் இருந்து திருமணமான பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.

* திருமணம் தமிழ்நாட்டில் நடந்திருக்க வேண்டியது அவசியம்.

logo
Kalki Online
kalkionline.com